பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் கலி யுகத்தில் ஸங்கீர்த்தன இயக்கத்தைப் பரப்புவார் என்றும் அவரை அவருடைய சகாக்களுடன் இணைந்து வழிபடுபவர்கள் புத்திசாலிகள் என்றும் ஸ்ரீமத் பாகவதம் (11.5.32) கூறுகிறது. அதன்படி, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைப்...
ஸ்வாமிஜி தினமும் மாலை வேளையில் ஆரத்தி செய்தார், அவரைக் காண வந்தவர்கள் அதனை என்னவென்று அறியாமல், மணி வாசித்தல் என்று அழைத்தனர். படிப்படியாக ஸ்வாமிஜி தன்னைச் சந்திக்க வந்தவர்களிடம் இந்திய கலாசாரத்தை அறிமுகப்படுத்தினார். கிருஷ்ணரிடம் சரணடைவது என்பது அவர்களுக்கு ஆச்சரியமானதாக இருந்தது. அவர்கள் தற்போது நிகழ்ச்சிகளில் மிகுந்த ஆர்வத்துடன் கலந்துகொள்ள தொடங்கினர்.
இரண்டு நாள் கழித்து, 19 செப்டம்பர் அன்று ஜலதூத கப்பல் நியூயார்க் துறைமுகத்தை அடைந்தது. முறையான வைஷ்ணவ சந்நியாசியின் தோற்றத்தில் நியூயார்க் நகரத்திற்கு வந்த முதல் நபர் இவரே. அவர் நேரடியாக பென்சில்வேனியாவில் உள்ள பட்லர் பகுதிக்குச் சென்றார், அங்கு அவரை திரு. கோபால் அகர்வால் வரவேற்று தனது இல்லத்திற்கு அழைத்துச் சென்றார்.
இரண்டாம் உலகப் போரின் ஒரு காலக் கட்டத்தில், ஆங்கிலேயர்கள் உணவுப் பொருட்களைத் தாங்கிய படகுகளை மூழ்கடித்தனர், பல்வேறு நெல் வயல்களை அழித்தனர்-எதிரிகள் அவற்றைக் கைப்பற்றி விடக் கூடாது என்று பயந்தனர். இது வங்காளத்தில்...
நாசிக் என்னும் பெயரானது நாஸிக என்னும் சமஸ்கிருத வார்த்தையிலிருந்து வந்தது, நாஸிக என்றால் "மூக்கு" என்று பொருள். இங்குதான் லக்ஷ்மணர் இராவணனின் தங்கையான சூர்பனகையின் மூக்கை அறுத்தார்.