பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.
பகவான் சைதன்ய மஹாபிரபுவை நம்மில் ஒருவராக நினைத்துவிடக் கூடாது. அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே என்பதால், அவர் ஒருபோதும் மாயை என்னும் மேகத்தினுள் வருவதில்லை. கிருஷ்ணரும் அவரது விரிவுகளும், ஏன் அவரது உயர்ந்த பக்தர்களும்கூட மாயையின் பிடியினுள் ஒருபோதும் விழுவதில்லை. பகவான் சைதன்யர் கிருஷ்ணரின் மீதான அன்பினை கிருஷ்ண பக்தியைப் பரப்புவதற்காகவே பூமிக்கு வந்தார். வேறுவிதமாகக் கூறினால், அவர் சாக்ஷாத் கிருஷ்ணரே, உயிர்வாழிகள் கிருஷ்ணரை அணுகுவதற்கான முறையான வழிமுறையைக் கற்றுக் கொடுக்க அவர் வந்தார்.
கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி.
கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.
பரம்பொருளான முழுமுதற் கடவுள் தனது நித்தியமான திவ்ய ஸ்வரூபத்தில் அவ்வப்போது இப்பிரபஞ்சத்தில் அவதரிக்கின்றார். அவ்வாறு வருவதற்கு எந்த கட்டாயத்திற்கும் அவர் உட்பட்டவரல்ல என்றபோதிலும், அவரைப் பற்றிய அறிவை இழந்து இப்பௌதிக உலகில் துன்பப்பட்டுக் கொண்டிருக்கும் நிலை தாழ்ந்த கட்டுண்ட ஆத்மாக்களின் நன்மைக்காக
எம்பெருமானே, மனிதன், மிருகம், சாது, தேவர், மீன், ஆமை என பல்வேறு ரூபங்களில் அவதரித்து, அதன் மூலமாக முழு படைப்பையும் பராமரித்து ஒவ்வொரு யுகத்திலும் அசுரக் கொள்கைகளை நீங்கள் வதம் செய்கிறீர்கள். இதனால், எம்பெருமானே, நீங்கள் தர்மத்தின் பாதுகாவலராகத் திகழ்கிறீர்கள். கலி யுகத்திலோ நீங்கள் உங்களை பரம புருஷ பகவானாக வெளிக்காட்டிக்கொள்வதில்லை. எனவே, நீங்கள் த்ரி-யுக, அல்லது மூன்று யுகங்களில் மட்டும் தோன்றக்கூடிய இறைவன் என்று அறியப்படுகிறீர்கள்.