மருத்துவம், கல்வி, இராணுவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியினை நவீன நாகரிகம் பெருமையுடன் காணும் சூழலில், ஒரு சாதாரண காய்ச்சல் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது என்பதைப் பார்க்கும்பொழுது, ஒரு மருத்துவரான எனக்கு தர்ம சங்கடமாகவும் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. சற்றுப் பொறுங்கள், நீங்கள் இதை எவ்வாறு சாதாரண காய்ச்சல் என்று கூறலாம்? இது கொசுவினால் உருவாகி உயிரையே பறிக்கும் டெங்கு காய்ச்சல் அல்லவா!” என்று பலர் கூறலாம்.
சேலம் மாநகருக்கு அருகே எழில் சூழ்ந்த கல்வராயன் மலையில், விவசாயத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு பக்த சமுதாயம் தற்போது வளர்ந்து வருகிறது. பஞ்சவடி பண்ணை” என்ற பெயரில் அழைக்கப்படும் இவ்விடத்தில் வருடம் முழுவதும் (குறிப்பாக கோடையில்) நிலவும் இனிய தட்பவெப்பம் இங்கு வசிப்பவர்களுக்கும் பார்வையாளர்களுக்கும் தமிழ்நாட்டின் வெப்பத்திலிருந்து விடுதலையளிக்கிறது.
தமிழர்களின் பண்பாடு மட்டுமா: ஜல்லிக்கட்டு என்பது தமிழர்களின் பண்பாடு என்று பரப்பப்படுகிறது. இன்றைய சூழ்நிலையில் அஃது உண்மையைப் போல தோன்றினாலும், உண்மையில் இப்பயிற்சி பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது என்பதை கவனிக்க வேண்டும். கடந்த பகவத் தரிசன இதழில், பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் எவ்வாறு ஒரே சமயத்தில் ஏழு காளைகளை அடக்கி ஸத்யா (அல்லது நப்பின்னை) என்ற இளவரசியைத் திருமணம் செய்தார் என்பதை விவரித்திருந்தோம். ஸத்யா கிருஷ்ணரின் உறவுக்கார பெண்மணி என்பதால், நிச்சயம் அவளது நாடு தமிழகமாக இருந்திருக்க வாய்ப்பில்லை. காளைகளை அடக்கி மணமுடித்தல் என்ற பழக்கம் பாரதம் முழுவதும் இருந்து வந்துள்ளது. சமீப காலத்தில் அது படிப்படியாகக் குறைந்து பாண்டிய நாட்டுடன் தொடர்புடைய பழக்கமாக மாறி விட்டது என்பதை கவனிக்க வேண்டும்.
நாஸ்திகன் என்னும் சொல், பொதுவாக கடவுளின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிக்கிறது. இருப்பினும், உண்மையில், நாஸ்திகன் என்னும் சொல் வேதங்களின் மீது நம்பிக்கை இல்லாதவனைக் குறிப்பதற்கான சொல்லாகும். மனித சமுதாயம் இவ்வுலகில் சிறப்பாக வாழவும் சிறப்பான மறுவாழ்வை எய்தவும் வேத சாஸ்திரங்கள் உதவுகின்றன. ஆனால் யாரேனும் இந்த வேத சாஸ்திரங்களில் நம்பிக்கையின்றி இருந்தால், அந்த நபர் நாஸ்திகன் என்று அழைக்கப்பட வேண்டும். இதன்படி, வேத சாஸ்திரங்களை ஏற்காத இதர மதத்தினரும், வேத சாஸ்திரங்களில் நம்பிக்கை வைக்காத இந்து மதத்தினரும் நாஸ்திகர்களாகவே கருதப்படுகின்றனர்.
கடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். கடன் தொல்லையினால், தூக்குப் போட்டுத் தற்கொலை, விஷம் குடித்துத் தற்கொலை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி வரும் செய்திகளாகும். மக்கள் கடன் தொல்லையினால் அவதிப்படும்போது நரக வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.