- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீமத் பாகவத சுருக்கம்

நாராயண கவசம்

விஸ்வரூபர் நாராணய கவசத்தை இந்திரனுக்கு உபதேசிக்கத் துவங்கினார். ஓம் அபவித்ர: பவித்ரோ வா ஸர்வாவஸ்தாம் கதோ ’பி வா/ ய: ஸ்மரேத் புண்டரீகாக்ஷம் ஸ பஹ்யாப்யந்தர: சுசி:/ ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு ஸ்ரீ-விஷ்ணு.

இந்திரன் பிருஹஸ்பதியை அவமதித்தல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின்...

தக்ஷன் நாரதரை சபித்தல்

பகவானின் மாயா சக்தியால் தூண்டப்பட்டு பிரஜாபதி தக்ஷன், அஸிக்னி என்ற பாஞ்சஜனீயின் மூலம் பத்தாயிரம் மகன்களைப் பெற்றார். அந்த மகன்கள் ஹர்யஸ்வர்கள் என்று அழைக்கப்பட்டனர். அவர்கள் அனைவரும் குணத்தில் சாந்தமானவர்களாகவும் பணிவுமிக்கவர்களாகவும் இருந்தனர். தந்தையின் கட்டளையை ஏற்று, மேற்கில் சிந்து நதி கடலுடன் சங்கமிக்கும் நாராயண சரஸ் என்னும் புனித தீர்த்தத்திற்குச் சென்றனர்.

ஹம்ஸ குஹ்ய பிரார்த்தனைகள்

அஜாமிளனின் வரலாற்றை அறிந்த பின்னர், பரீக்ஷித் மஹாராஜர் சுகதேவ கோஸ்வாமியிடம் பின்வருமாறு வேண்டினார். “ஸ்வாயம்புவ மனுவின் ஆட்சிக் காலத்தில் பலவித ஜீவராசிகள் படைக்கப்பட்டதை (மூன்றாம் ஸ்கந்தத்தில்) விளக்கினீர்கள். இதைப் பற்றி மேலும் விவரமாக அறிய விரும்புகிறேன். தயைகூர்ந்து விளக்கியருளுங்கள்.”

எம தூதர்களுக்கு எமராஜர் வழங்கிய அறிவுரை

விஷ்ணு தூதர்களால் தோற்கடிக்கப்பட்ட எம தூதர்கள், ஸம்யமனீ புரியின் தலைவரும் தங்களின் எஜமானருமான எமராஜரிடம் சென்று, நிகழ்ந்ததை எடுத்துரைத்து சில வினாக்களை எழுப்பினர்: “எஜமானரே! அஜாமிளன் ‘நாராயண’ என அழைத்ததும், ‘பயப்படாதே’ எனக் கூறியபடி, அங்கே வந்து அவனை விடுவித்த அந்த நான்கு அழகிய நபர்கள் யார் என்பதை அறிய விரும்புகிறோம். அஃது உகந்ததாக இருக்குமெனில், தயவுசெய்து கூறுங்கள்.

Latest

- Advertisement -spot_img