சக்தியை வேண்டிய தேவர்களின் பிரார்த்தனைகளை செவியுற்ற பகவான் படைப்புத் தொழிலுக்கு புத்துயிர் ஊட்ட முடிவு செய்தார். அதற்காக, இருபத்துமூன்று மூலப் பொருட்களுக்குள் தமது புற சக்தியான காளிதேவியுடன் புகுந்தார். அதனால், உறங்கி எழுபவன் மீண்டும் தன் செயல்களில் ஈடுபடுவதைப் போலவே, அனைத்து ஜீவராசிகளும் வெவ்வேறு செயல்களை செய்யும்படி உற்சாகப்படுத்தப்பட்டனர்.
இந்த இதழில்: மூன்றாம் ஸ்கந்தம், ஐந்தாம் அத்தியாயம்
இதுவரை மகாத்மா விதுரர் தூய பக்தரான உத்தவருடன் மேற்கொண்ட தெய்வீக உரையாடலைக் கேட்டோம், இனி மாமுனிவரான மைத்ரேயரிடம் விதுரர்...
அவரை வலம் வந்து வணங்கிய உத்தவர், அவரை விட்டு பிரிய மனமின்றி மிகுந்த துயரத்துடன் விதுரர் இருக்கும் இடத்திற்கு வந்து சேர்ந்தார். அவர் விதுரரிடம் கூறினார்: "அன்பிற்குரிய விதுரரே, அவரது தரிசனத்தால் கிடைக்கும் ஆனந்தத்தைப் பெற முடியாமல் இப்பொழுது நான் பித்தனைப் போல் ஆகியிருக்கிறேன். அவரது உபதேசத்தின்படி நான் பத்ரிகாஷ்ரமத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அங்கே அனைத்து ஜீவராசிகளின் நன்மைக்காக நர-நாராயண ரிஷிக்கள் புராதன காலத்திலிருந்து கடும் தவங்களை மேற்கொண்டு வருகின்றனர்."
வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ்
இந்த இதழில்: மூன்றாம் காண்டம், மூன்றாம் அத்தியாயம்
சென்ற இதழில் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பெருமைகளையும் அவரது விருந்தாவன லீலைகளையும் உத்தவர் விதுரரிடம்...
“பகவான் தனது அந்தரங்க சக்தியான யோக மாயையால் இந்த ஜடவுலகில் தோன்றுகிறார். அவருடைய லீலைகள் அவரது விரிவங்கமான வைகுண்டநாதர் உட்பட அனைவருக்கும் அற்புதமாக இருந்தன. யுதிஷ்டிரரின் ராஜசூய யாகத்தில் கலந்துகொண்ட தேவர்கள் அனைவரும் கிருஷ்ணரின் உன்னத அழகில் மனதைப் பறிகொடுத்து பிரம்மாவை மனமார பாராட்டினர். (கிருஷ்ணர், பிரம்மதேவரின் ஒரு அற்புத படைப்பு என்று அவர்கள் எண்ணினர்.)