- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

ஸ்ரீல ரூப கோஸ்வாமி :

கலி யுகத்தின் தர்மமான ஹரிநாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காக பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக அவதரித்தார். வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களான அனைவரையும் விடுவிக்கும் திருப்பணியில் அவர் தன்னுடைய அந்தரங்க சேவகர்கள் பலரையும் ஈடுபடுத்தினார். அவர்களில் மிகவும் முக்கியமானவர் ஸ்ரீல ரூப கோஸ்வாமி. கௌடீய சம்பிரதாயம் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவிடமிருந்து தொடங்குகிறது, அவர் மாபெரும் பண்டிதராகத் திகழ்ந்தார் என்றபோதிலும், சிக்ஷாஷ்டகம் என்னும் எட்டு பாடல்களைத் தவிர அவர் வேறு எதையும் எழுதவில்லை. ஸம்பிரதாயத்தை நிலைநாட்டுவதற்குத் தேவையான எழுத்துப் பணியினை அவர் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளிடம் ஒப்படைத்தார். அதிலும் குறிப்பாக, ரூப கோஸ்வாமிக்கும் ஸநாதன கோஸ்வாமிக்கும் அப்பணி ஒப்படைக்கப்பட்டது. எனவே, கௌடீய சம்பிரதாயத்தில் பல்வேறு பிரிவுகள் உள்ள போதிலும் ரூப கோஸ்வாமியைப் பின்பற்றுபவர்கள் ரூபானுகர்கள் என்று அழைக்கப்பட்டு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தவர்களாகக் கருதப்படுகின்றனர்.

கடனிலிருந்து விடுபடுவது எப்படி?

கடன் அன்பை முறிக்கும், கடன் வாங்கிக் கடன் கொடுத்தார் கெட்டார், பெற்ற பிள்ளையையும் வாங்கிய கடனையும் இல்லை எனக் கூற முடியாது என்று மக்கள் அடிக்கடி கூறுவதைக் கேட்டிருக்கின்றோம். கடன் தொல்லையினால், தூக்குப் போட்டுத் தற்கொலை, விஷம் குடித்துத் தற்கொலை. ரயில் முன் பாய்ந்து தற்கொலை போன்ற விரும்பத்தகாத சம்பவங்களும் அடிக்கடி வரும் செய்திகளாகும். மக்கள் கடன் தொல்லையினால் அவதிப்படும்போது நரக வேதனையின் உச்சத்திற்கே சென்று விடுகின்றனர்.

சிடா-ததி திருவிழா

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் முக்கிய சீடர்களில் ஒருவராகவும் விருந்தாவனத்தின் ஆறு கோஸ்வாமிகளில் ஒருவராகவும் விளங்குபவர் ரகுநாத தாஸ கோஸ்வாமி அவர்கள். மிகப்பெரிய செல்வந்த குடும்பத்தைச்...

பாத யாத்திரை

கிருஷ்ண பக்தியையும் ஹரி நாம ஸங்கீர்த்தனத்தையும் உலகின் ஒவ்வொரு கிராமங் களுக்கும் நகரங்களுக்கும் கொண்டு செல்வதற்கான அருமையான ஏற்பாடு, இஸ்கானின் அகில இந்திய பாத யாத்திரைக்...

வேத கோளரங்கத்தின் கோயில் மாயாபுரில் உருவாகும் மாபெரும் திருக்கோயில்

இஸ்கான் இயக்கத்தின் ஆன்மீகத் தலைமையிடம் ஸ்ரீதாம் மாயாபுர். மேற்கு வங்காளத்தின் கொல்கத்தாவிற்கு அருகில் அமைந்துள்ள இந்த திருத்தலத்தில்தான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்தார். அங்கே ஸ்ரீல...

Latest

- Advertisement -spot_img