எல்லாவற்றிலும் வீற்றுள்ள கிருஷ்ணர்

Must read

—ஸ்ருத கீர்த்தி தாஸரின் பேட்டியிலிருந்து

ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதர் பூங்கா ஒன்றில் இருந்தபோது, ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் வினவினார், “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளாரா?”

“மழை மேகத்தைப் போல கிருஷ்ணர் கருநீல வண்ணமுடையவர் என்று கிருஷ்ணர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது,” என்று சீடர் ஒருவர் பதிலளித்தார்.

“கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளார். அவருடைய திருமேனியின் தேஜஸிலிருந்து வரும் ஒளியே ஆகாயத்திற்கு நீல நிறத்தை அளிக்கிறது,” என்று ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளித்தார்.

ஸ்ரீல பிரபுபாதர் பூங்காவிலிருந்து தமது அறைக்குச் சென்றவுடன் அன்றைய தினத்தில் பதிவு செய்யப்பட்ட ஸ்ரீமத் பாகவத வகுப்பினைக் கேட்பார். சில சமயங்களில் பூங்காவிற்கு வெளியிலுள்ள புதர்களில் வளர்ந்துள்ள ஸ்டார் மல்லிகைப் பூவை எடுத்து வரச் சொல்வார். அந்தப் பூக்கள் குறிப்பாக இரவு நேரங்களில் அதிகமான நறுமணத்தை வழங்கும். ஒருநாள் மாலை அந்த மல்லிகை கொத்தை நுகர்ந்த அவர் கூறினார், “ஆஹா, இது கிருஷ்ணர்.”

மாலைவேளையில் நான் அடிக்கடி அவரது அறைக்கு மல்லிகையை எடுத்து வருவேன். அவரது கைகால்கள் பிடித்து விடப்படும்போது, சில சமயம் அவர் அதனை நுகர்வார். முழு இரவும் அவர் அதனை தமது நாசிக்கு அருகில் தலையணையின் மீது வைத்து விடுவார். மறுநாள் காலை அவை எந்த மாற்றமும் அடையாமல் அதே இடத்தில் அப்படியே இருக்கும், அதே நறுமணத்துடன் அப்போதுதான் பறித்ததுபோல காணப்படும்.

[ஆகாயம், மல்லிகை என] பெளதிகப் படைப்பிலுள்ள எல்லாவற்றிலும் கிருஷ்ணர் உள்ளார் என்பதை இதுபோன்ற நிகழ்வுகளின் மூலமாக அவர் எங்களுக்கு வெளிப்படுத்துவார்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

ஆன்மீக புத்துணர்ச்சி பெறுவீர்!

உண்மையான ஆனந்தை ஸ்ரீல பிரபுபாதரின் ஆன்மீக புத்தங்கள் வழியாக பெறலாம் வாரீர்!

Archives