—ஜயாத்வைத ஸ்வாமியின் பேட்டியிலிருந்து
புரோக்லின் நகரின் கிழக்கு நதிக்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், ஸ்ரீல பிரபுபாதரும் நானும் ஹென்றி தெருவில் உள்ள நமது கோயிலுக்கு காரில் திரும்பினோம். கோயிலுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக, வீதியின் ஓரத்தில் ஒரு காட்சியைக் கண்டோம். அங்கே சிறுவன் ஒருவன் தபால் பெட்டியில் தபால் போட முயன்றான், அவனுடன் வந்திருந்தவர் அவனைத் தூக்கி அவனுக்கு உதவினார். அக்காட்சி ஐந்து அல்லது பத்து நொடிகள் மட்டுமே இருந்திருக்கும். ஆயினும், காரில் இருந்தபடி அதைக் கண்ட பிரபுபாதர் அக்காட்சியில் ஆழ்ந்தார். அவரது கண்கள் பெரிதாகி, பிரகாசமாயின, அவரது கவனத்தில் அக்காட்சி மட்டுமே இருந்தது.
பிரபுபாதர் கல்கத்தாவில் வாழ்ந்த தமது குழந்தைப் பருவத்தை நினைத்துப் பார்க்கிறாரோ என்று நான் யோசித்தேன். அந்த மனிதன் சிறுவனை இறக்கி விட்ட பின்னர், பிரபுபாதர் கூறினார், “அச்சிறுவனால் அச்செயலைச் சுயமாகச் செய்ய முடியாது. ஆயினும், பாசமுள்ள தந்தை உதவி செய்யும்போது, அது சாத்தியமாகிறது. அதுபோலவே, ஜீவன்களான நமக்கென்று என்ன சக்தி உள்ளது? இருப்பினும், பகவான் அல்லது ஆன்மீக குருவினால் பாசமுடன் உதவப்படும்போது, அது சாத்தியமாகிறது.
தபால் பெட்டியில் சிறுவன் தபால் போடுவதைப் பார்த்து பிரபுபாதர் எங்களுக்கு தத்துவத்தை எடுத்தரைத்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!