உள்நோக்கமற்ற நாம ஸங்கீர்த்தனம்

Must read

A.C Bhaktivedanta Swami Prabhupada
"புலனின்பமே பிரதானம்" என்ற மோகத்தில் மயங்கியோர் மத்தியில் ஆன்மீக விஷயங்களுக்கு புத்துயிரளித்து, மனித வாழ்வின் உண்மையான குறிக்கோளான கிருஷ்ண பக்தியைத் தூண்டி, குழப்பங்கள் குடிகொண்ட கலி யுகத்தின் தற்போதைய நிலைக்குத் தகுந்தாற் போல கிருஷ்ண பக்தி வாழ்க்கையை நடைமுறைப்படுத்தி, பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் இருப்பிடத்திற்கு உயிர்வாழிகளைக் கொண்டு சேர்க்க வேண்டும் என்ற ஒரே குறிக்கோளுடன் தன் வாழ்நாள் முழுவதும் அரும்பாடுபட்ட ஆன்மீக குருவே ஸ்ரீல பிரபுபாதர்.
ஸ்ரீல பிரபுபாதரின் நினைவுகள் 
உள்நோக்கமற்ற நாம ஸங்கீர்த்தனம்
தாடியுடன் இருந்த சாது ஒருவர் கடவுளின் பெயர்களை உச்சரித்து, அதன் மூலம் மக்களின் நோய்களை தீர்ப்பதாகக் கூறி பல கூட்டங்களை பம்பாய் முழுவதும் நிகழ்த்தி வந்தார். அவரது கூட்டங்களில் ஆயிரக்கணக்கான மக்கள் பங்கெடுத்தனர், பலர் குணமடைந்தனர். அவர் ஸ்ரீல பிரபுபாதரிடம், அதே போன்ற பிரம்மாண்டமான கூட்டங்களை நிகழ்த்தி ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரித்தால் மக்கள் பலர் பயனடைவர் என்றும், அதற்கு பிரபுபாதரும் தம்முடன் ஒத்துழைக்க வேண்டும் என்றும் பரிந்துரைத்தார்.
அவர் பிரபுபாதரிடம் கூறினார்: “நானும் கூட்டத்தைக் கூட்டுகிறேன், நீங்களும் கூட்டத்தைக் கூட்டுகிறீர்கள். நானும் மக்களை கடவுளின் பெயர்களை உச்சரிக்க வைக்கின்றேன், நீங்களும் மக்களை ஹரே கிருஷ்ண மந்திரத்தை உச்சரிக்க வைக்கின்றீர்கள். எனவே, நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.”
ஸ்ரீல பிரபுபாதரோ முடியாது என்று மறுப்பு தெரிவித்து கூறினார்: “இஃது எங்களின் கோட்பாடுகளுக்கு விரோதமானது. கடவுளின் நாமமும் கடவுளே, நாம் கடவுளின் சேவகர்கள். நாம் கடவுளின் திருநாமங்களை நமது புலனின்பத்திற்காகவோ பௌதிகத் தேவைகளுக்காகவோ பயன்படுத்தக் கூடாது. எவ்வித சொந்த உள்நோக்கமும் இன்றி, வெறுமனே பகவானைப் போற்றுவதற்காகவும் அவருக்கு சேவை செய்வதற்காகவுமே நாங்கள் திருநாமங்களை உச்சரிக்கின்றோம். எனவே, நாம் பரஸ்பரம் ஒத்துழைப்புடன் செயல்பட வேண்டும்.” ஸ்ரீல பிரபுபாதரோ முடியாது என்று மறுப்பு தெரிவித்து கூறினார்: “இஃது எங்களின் கோட்பாடுகளுக்கு விரோதமானது. கடவுளின் நாமமும் கடவுளே, நாம் கடவுளின் சேவகர்கள். நாம் கடவுளின் திருநாமங்களை நமது புலனின்பத்திற்காகவோ பௌதிகத் தேவைகளுக்காகவோ பயன்படுத்தக் கூடாது. எவ்வித சொந்த உள்நோக்கமும் இன்றி, வெறுமனே பகவானைப் போற்றுவதற்காகவும் அவருக்கு சேவை செய்வதற்காகவுமே நாங்கள் திருநாமங்களை உச்சரிக்கின்றோம். எனவே, எங்களால் இதுபோன்ற நிகழ்ச்சிகளில் பங்கெடுக்க முடியாது.” 
பகவானுடைய திருநாமத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டும் என்பதைக் கற்பிப்பதில் ஸ்ரீல பிரபுபாதர் எப்போதும் கவனமாக இருந்தார்.
ஜய ஸ்ரீல பிரபுபாத!!!
“மூலம்: தவத்திரு கிரிராஜ் ஸ்வாமி அவர்கள் எழுதிய I’ll Build You a Temple, பக்கம் 211–12.”
[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives