பசு மாமிசம் உண்ணுதல், மது அருந்துதல், நீலப் படங்களைப் பார்த்தல் ஆகிய மூன்றுமே தனிமனித உரிமை என்ற கோணத்தில் அணுகப்படுகின்றன–இவை மாபெரும் பாவங்கள் என்பதும் பாவத்தின் முக்கிய தூண்கள் என்பதும் மக்களுக்கு உரைக்கப்படுவதே இல்லை. இவ்வாறாக, இன்றைய நாஸ்திகர்களும் இடதுசாரி மனப்பான்மை கொண்டவர்களும், தனிமனித உரிமை என்பதை அதிகமாக வலியுறுத்துவதன் மூலமாக, பாவ புண்ணியம் குறித்த அச்சமற்ற வாழ்வை மனித சமுதாயத்தில் உருவாக்கி நாஸ்திகத்தை திணித்து வருகின்றனர்.
ஆன்மீக விஷயங்களை ஒவ்வொருவரும் தானாக உணர வேண்டும் என்னும் போலியான கருத்தை முறியடிக்கும்வண்ணம் சாஸ்திரங்கள் மற்றும் குருவின் முக்கியத்துவத்தை எடுத்துரைத்து கடந்த இரு இதழ்களில் கட்டுரை வெளியிட்டிருந்தோம். ஆன்மீக உணர்விற்கு யாரும் தேவையில்லை என்று கூறும் தரப்பினர் (அவர்களுக்கு விடையளிக்கப்பட்டு விட்டது) ஒருபுறம் இருக்க, அவர்களுக்கு முற்றிலும் மாற்றுப் பாதையில் இருக்கும் இதர மக்கள் சிலர் ஆன்மீக முன்னேற்றத்திற்கு குருவின் கருணை மட்டுமே போதும், தாம் செய்ய வேண்டியது ஏதுமில்லை என்று நினைக்கின்றனர். அவர்களுடைய எண்ணங்களில் உள்ள பிழைகளையும் ஆன்மீக குருவின் உபதேசங்களைப் பின்பற்றுவதன் அவசியத்தையும் இந்த இதழில் காணலாம்.
ஆதாரமற்றதும் நடைமுறைக்கு ஒத்துவராததுமான அத்தகு கூற்றுகளை எடுத்துரைக்கும் நபர்களுக்கு பதிலளிக்கும் வகையில், சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை பகவத் தரிசனத்தின் சென்ற இதழில் வெளியிட்டிருந் தோம். ஆன்மீகத் தன்னுணர்வைப் பெறுவதில் குருவின் அவசியத்தை இந்த இதழில் காணலாம்.
சில மாதங்களுக்கு முன்னர் எமது கோயிலுக்கு வருகை தந்த நபர் ஒருவர், "நீங்கள் ஏன் பகவத் கீதை போன்ற சாஸ்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கிறீர்கள்? தன்னுணர்வு, இறையுணர்வு என்பவை தானாக உணர்வதுதானே? இதற்கு புத்தகங்கள் தேவையா? புத்தகங்களால் தன்னுணர்வை எவ்வாறு வழங்க இயலும்?" என்று கேள்வி கேட்டார். மேலும், "நாம் நமக்குள்ளே உணர்வதுதான் தன்னுணர்வு" என்று பிரபல சாமியார் ஒருவர் கூறியுள்ளதாகவும் தெரிவித்தார். அவருக்கு சாஸ்திரங்களின் முக்கியத்துவத்தை யாம் பக்குவமாக எடுத்துரைக்க அவரும் உண்மையை உணர்ந்தார். அத்தகவல்கள் பகவத் தரிசன வாசகர்களுக்கும் உதவும் என்பதால், இதோ இங்கே இந்தக் கட்டுரை.