கிருஷ்ணரின் உலகம் இந்த ஜடவுலகத்தைப் போன்று சூரியனாலோ சந்திரனாலோ மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவதில்லை. அந்த உலகம் தானாகவே பிரகாசமாக உள்ளது. இந்த ஜடவுலகில் சூரிய கிரகம் மட்டுமே சுயப் பிரகாசம் கொண்டுள்ளது. வைகுண்டம் என்று அழைக்கப்படும் அந்த ஆன்மீக உலகிலோ அனைத்து கிரகங்களும் சுயப் பிரகாசமுடையவை. அவற்றின் பிரகாசமே பிரம்மஜோதி.
ஹரிபாத தாஸ்: நாங்கள் எங்களது குருவான ஸ்ரீல பிரபுபாதரால் ஆசிர்வதிக்கப்பட்டதால், மனித வாழ்வின் உண்மையான நோக்கத்தினைப் புரிந்து கொண்டுள்ளோம். கிருஷ்ணரின் மீதான அன்பை வளர்த்துக் கொண்டால், நாம் அவரது நித்திய உலகமான ஆன்மீக உலகத்திற்குத் திரும்பிச் செல்லலாம் என்பதைப் புரிந்து கொண்டுள்ளோம்.