AUTHOR NAME

Vanamali Gopala Dasa

100 POSTS
0 COMMENTS
திரு. வனமாலி கோபால தாஸ் அவர்கள், இஸ்கான் சார்பில் விருந்தாவனத்தில் நடைபெறும் பாகவத உயர்கல்வியைப் பயின்றவர்; இஸ்கான் கும்பகோணம் கிளையின் மேலாளராகத் தொண்டு புரிந்து வருகிறார்.

அவதாரங்களும் அவர்களின் குறிப்பிட்ட பணிகளும்

பூமியின் பாரத்தைக் குறைப்பதற்காக அவதரித்த பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் மூல முழுமுதற் கடவுள் ஆவார். அவர் தம் குழந்தைப் பருவத்திலேயே பூதனை, ஷகடாசுரன், திருணாவர்த்தன் போன்ற சக்திமிக்க அசுரர்களை எளிதாகக் கொன்றார். அர்ஜுன மரங்களாயிருந்த நளகுவேரன் மற்றும் மணிக்ரீவனுக்கு முக்தியளித்தார். கொடிய விஷப் பாம்பான காளியனை அடக்கி, காட்டுத் தீயை அணைத்து விரஜவாசிகளைக் காத்தார்.

புருஷ ஸுக்தம் நிலைநாட்டப்படுதல்

வழங்கியர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். "வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழம்" என்று அழைக்கப்படும்...

எல்லா காரணங்களுக்கும் காரணம்

பரம புருஷ பகவான் முக்குணங்களைப் படைக்கிறார், ஆனால் அவற்றால் அவர் பாதிக்கப்படுவதில்லை. இம்மூன்று குணங்களிலிருந்து பொருள், அறிவு, செயல் ஆகியவை உருவாகின்றன. இக்குணங்களின் காரணத்தால், ஜீவராசிகள் தங்களின் நித்திய தன்மையை மறக்கின்றனர்.

தூய பக்தித் தொண்டும் படைப்பின் வழிமுறையும்

தெளிந்த புத்தியுள்ள ஒருவன், பலவித ஆசைகள் நிரம்பியவனாக அல்லது ஆசைகளே இல்லாதவனாக அல்லது முக்தியை விரும்புபவனாக இருந்தாலும், அவன் முழுமுதற் கடவுளை தன் முழு சக்தியைப் பயன்படுத்தி தீவிரமாக வழிபாடு செய்ய வேண்டும். பரம புருஷரான ஸ்ரீ கிருஷ்ணரின் அனுமதியின்றி தேவர்களால் எந்த பலனையும் அளிக்க முடியாது என்பதால், புத்திசாலியான ஒருவன் எல்லா சூழ்நிலைகளிலும் ஸ்ரீ கிருஷ்ணரையே வழிபடுகிறான்.

இதயத்திலுள்ள இறைவன்

பகவானின் திவ்ய லீலைகளும் அவருடைய அருட் பார்வையும் அவரது அணுகிரகத்தின் அறிகுறிகளாகும். எனவே, அத்தகைய உன்னத திருவுருவத்தின் மீது மனதை முடிந்தவரை நிலைநிறுத்த வேண்டும்.

Latest