சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை.
ஒரு பயனற்ற முயற்சி
பிரபஞ்சம் உருவான வரலாற்றை ஆய்வு செய்து வரும் விஞ்ஞானிகள், ஆய்வின் முக்கியமான முன்னேற்றமாக “கடவுளின் அணுத்துகள்" என்று அழைக்கப்படும் “ஹிக்ஸ் போஸான்" (Higgs boson) என்ற பொருளைக் கண்டுபிடித்துள்ளது குறித்த...
ஆத்மாவுக்கும் உடலுக்கும் உள்ள வேறுபாட்டை ஒருவன் அறிந்துகொள்ளாவிடில், மறுபிறவியை அவனால் புரிந்துகொள்ள இயலாது. ஆத்மாவின் தன்மையை நாம் அறிவதற்காக, பின்வரும் உதாரணத்தைக் கொண்டு கீதை (13.34) உதவி செய்கிறது: “ஒரே ஒரு சூரியன் இந்த பிரபஞ்சம் முழுவதையும் பிரகாசமாக்குவதைப் போல, உடலினுள் இருக்கும் ஆத்மா, தனது உணர்வினால் உடல் முழுவதையும் பிரகாசப்படுத்துகிறான்.”
மேலை நாடுகளின் ஆதிக்க சக்திகள் அங்கிருந்த மக்களிடம் மறுபிறவி குறித்த ஆழ்ந்த சிந்தனைகளை பல நூற்றாண்டுகளாக தடுத்துவிட்டது. ஆனால் மேலை நாட்டின் வரலாற்றிலும், உயிர் நித்தியமானது என்றும் அஃது ஓர் உடலிலிருந்து மற்றொன்றுக்கு மாறிச் செல்கிறது என்றும் புரிந்து கொண்ட சிந்தனையாளர்கள் இருக்கத்தான் செய்துள்ளனர். ஏராளமான தத்துவஞானிகள், நூலாசிரியர்கள், கலைஞர்கள், விஞ்ஞானிகள், மற்றும் அரசியல்வாதிகள் இக்கருத்திற்கு ஆழ்ந்த முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்
ஏப்ரல் 26, வியாழன்: அழகான கிழக்குக் கடற்கரை சாலையில், விஜிபி கோல்டன் பீச் அருகில் இஸ்கான் சென்னையின் சார்பாக புதிதாகக் கட்டப்பட்டுள்ள ஸ்ரீ ஸ்ரீ இராதா கிருஷ்ணர் திருக்கோவிலின் கும்பாபிஷேக விழா சீரும் சிறப்புமாக நடைபெற்றது.