AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

உண்ணாவிரதம் உண்மையும் போலியும்

ஆன்மீக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் அதற்கான பலனை நிச்சயம் அடைவர். பௌதிக நன்மைக்காக உண்ணாவிரதம் மேற்கொள்பவர்கள் பெரும் பாலான நேரங்களில் விரும்பிய பலனை அடைவதற்கு முன்பே தமது உண்ணாவிரதத்தை முடித்துக் கொள்வது வழக்கம். அவர்களது உண்ணாவிரதங்கள் புகழைக் கொடுக்கலாம், பிரச்சனைக்கான தீர்வைக் கொடுப்பதில்லை.

ஸ்ரீல ஜீவ கோஸ்வாமி

ஜீவ கோஸ்வாமி ஒரு தூய பக்தராகவும், வேத சாஸ்திரங்களில் வல்லவராகவும், பௌதிக ஆசைகளை முற்றிலும் துறந்தவராகவும் இருந்தார். இருப்பினும், ஸ்ரீல ரூப கோஸ்வாமி அவரை மிகவும் சாதாரண பணிகளில் ஈடுபடுத்தினார். சில சமயங்களில், ராதா கோவிந்த விக்ரஹ வழிபாட்டிற்குத் தேவையான பொருட்களை ஏற்பாடு செய்தல், மலர்மாலை தொடுத்தல், இடங்களை சுத்தம் செய்தல், ரூப கோஸ்வாமியின் பாத கமலங்களை பிடித்துவிடுதல், எழுதுவதற்காக ஆலிலைகளை ஏற்பாடு செய்தல், எழுதுகோல் (எழுத்தாணி) செய்தல் போன்ற பல சேவைகளில் ஜீவர் ஈடுபட்டார்.

வாமன அவதாரம்

தேவலோகத்தைக் கைப்பற்ற விரும்பிய மாமன்னர் பலியின் நோக்கத்தை அறிந்த பிருகு வம்ச பிராமணர்கள் அனைவரும் இணைந்து, மன்னருக்காக விஸ்வஜித் யாகத்தை நிறைவேற்றினர். யாகத்தின் பலனாக பலி பலமடங்கு வலிமை பெற்றார். மேலும், சக்தி வாய்ந்த வில், அம்பு, தெய்வீக கவசம், மஞ்சள் நிற குதிரைகள் பூட்டிய தங்க விமானம் முதலியவற்றையும் பெற்றார். அவருடைய பாட்டனாரான பிரஹலாதர் என்றுமே வாடாத மலர்களைக் கொண்ட மாலையையும், சுக்ராசாரியர் உயர்ரக சங்கினையும் பரிசளித்தனர். இவை அனைத்தும் கிடைக்கப்பெற்ற பலி மஹாராஜர் மிகுந்த பராக்கிரமத்துடனும் தேஜஸுடனும் மீண்டும் தேவலோகத்தைக் கைப்பற்ற தன் பரிவாரங்களுடன் படையெடுத்தார்.

யார் முழுமுதற் கடவுள்?

கடவுளை அறிவதற்கு வேதங்களே சிறந்த வழி என்பதை முன்பு (ஜனவரி இதழில்) கண்டோம். வேதங்களின் சாரமான பகவத் கீதையில், வியாசர், திருதராஷ்டிரர் பேசும்போது த்ருதராஷ்ட்ர உவாச என்கிறார்; அர்ஜுனன் பேசுகையில் அர்ஜுன உவாச என்கிறார்; ஸஞ்ஜயன் பேசுகையில் ஸஞ்சய உவாச என்கிறார். ஆனால் கிருஷ்ணர் பேசுகையில் க்ருஷ்ண உவாச என்பதற்குப் பதிலாக, ஸ்ரீ பகவான் உவாச என்று குறிப்பிட்டுள்ளார். பகவான் என்ற சொல்லின் பொருள் என்ன? பக என்றால் “வைபவங்கள்” என்றும், வான் என்றால் “உடையவர்” என்றும் பொருள்படுவதால், பகவான் என்றால் “வைபவங்களை உடையவர்” என்று பொருள். ஸ்ரீல பராசர முனி இதனை விஷ்ணு புராணத்தில் (6.5.47) மேலும் விளக்குகிறார்:

நவீன கல்வியின் குறைபாடுகள் யாவை?

நல்லொழுக்கத்தையும் நற்பண்புகளையும் கற்றுக் கொடுக்கும் கல்வியே சிறந்த கல்வி வழங்கியவர்:  திரு. சைதன்ய சரண தாஸ் “கட்டுப்படும் இயந்திரங்களும் கட்டுப்படாத மனிதர்களும் நம்மிடம் உள்ளன" என்னும் இந்த புதுமொழி தொழில்நுட்பத்தை தவறாக உபயோகிப்பதால் உலகின் பல...

Latest