- Advertisement -spot_img

CATEGORY

பகவத் கீதை, ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதால் அவரைப் பற்றி அறிந்துகொள்ள முடியும்; கிருஷ்ணரை அறிந்தவர் மேலும் அறிவதற்கு ஒன்றும் இல்லை. நிலம், நீர், நெருப்பு, காற்று, ஆகாயம், மனம், புத்தி, அஹங்காரம் ஆகிய எட்டு பௌதிகப் படைப்புகளும் கிருஷ்ணரின் சக்திகளே, இவற்றைக் காட்டிலும் உயர்ந்த ஜீவனும் அவரது சக்தியே. கிருஷ்ணரே எல்லாவற்றிற்கும் மூலம், அவரைவிட உயர்ந்த உண்மை வேறெதுவும் இல்லை. அனைத்திலும் அவரே முக்கிய அம்சமாக உள்ளார். அவரது தெய்வீக சக்தியான மாயையை வெல்வது மிகவும் அரிது, ஆனால் அவரிடம் சரணடைவோர் அதனை எளிதில் கடக்கலாம். இருப்பினும், நான்கு வித மக்கள் அவரிடம் சரணடைவதில்லை. அவரிடம் சரணடையும் நான்கு வித நல்லோரில் ஞானியே மிகச் சிறந்தவன். ஆனால் போதிய அறிவற்ற மக்களோ, பௌதிக ஆசைகளில் மயங்கி தேவர்களிடம் சரணடைகின்றனர். அவர்களுக்கான பலன்களை கிருஷ்ணரே வழங்குகிறார் என்றபோதிலும், அவை தற்காலிகமானவை. கிருஷ்ணரின் உருவத்தை மறுத்து, பரம்பொருள் அருவமானது என்று கருதுவோர், தேவர்களை வழிபடுபவர்களைக் காட்டிலும் முட்டாள்கள். அனைத்தையும் அறிந்த கிருஷ்ணரை யாராலும் முழுமையாக அறிய முடியாது. கிருஷ்ணரை முறையாக அறிந்து, அவருக்கு பக்தி செய்பவர்கள், தங்களது வாழ்வின் இறுதியில் அவரிடமே செல்வர்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கிருஷ்ணரிடம் சரணடைந்தால் மாயையை எளிதில் கடக்க முடியும்; இருப்பினும், பலர் கிருஷ்ணரிடம் சரணடைவது இல்லை, ஏன்? ஏனெனில், அவர்கள் சற்றும் அறிவற்ற மூடர்களாகவும், மனிதரில் கடைநிலை யோராகவும், மாயையிடம் அறிவை இழந்தவர்களாகவும், அசுரர்களின் நாத்திகத் தன்மையை ஏற்றவர்களாகவும் உள்ளனர். இந்த நான்கு துஷ்டர்களும் கிருஷ்ணரிடம் சரணடைவதில்லை. மூடர்கள்: இவர்கள் இரவு பகலாக கழுதையைப் போன்று புலனின்பத் திற்காக உழைக்கின்றனர். ஆன்மீக விஷயங்களுக்கு ‘நேரமில்லை’ என்று கூறிவிட்டு, பணப் பைத்தியம் பிடித்து அலையும் முதலாளிகளுக்குத் தொண்டு செய்வதில் இவர்கள் ஆர்வம் காட்டுகின்றனர், ஆனால் உன்னத முதலாளியான கிருஷ்ணருக்குத் தொண்டு செய்வதில் ஆர்வம் காட்டுவதில்லை. மனிதக் கழிவுகளை தின்று வாழும் பன்றி, நெய்யாலும் சர்க்கரையாலும் செய்யப் பட்ட இனிப்புகளை மதிப்பதில்லை; அதுபோல, புலனின்பத்தில் சலிப்பின்றி மூழ்கியிருக்கும் இத்தகு முட்டாள்கள் கிருஷ்ணரைப் பற்றிக் கேட்பதற்கு, நேரம் குறைவாக உள்ளது என்பர்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

யோகத்தின் அத்தகு உயர்ந்த நிலையை அடைவதற்கு உடல், மனம், மற்றும் ஆத்மாவினை எப்போதும் பரமனின் தொடர்பில் ஈடுபடுத்த வேண்டும்; தனிமையான இடத்தில் தனியே வசித்த

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

பகவத் கீதையின் அழிவற்ற விஞ்ஞானம் பன்னெடுங் காலத்திற்கு முன்பாகவே சூரிய தேவனுக்கு உரைக்கப்பட்டு குரு சீடப் பரம்பரையின் மூலமாக உணரப்பட்டு வந்தது என்றும், தன்னுடைய நண்பனாகவும் பக்தனாகவும் இருப்பதால் அதே ஞானத்தினை தற்போது அர்ஜுனனுக்கு வழங்குவதாகவும் கிருஷ்ணர் கூறினார். தன்னுடைய வயதை ஒத்தவரான கிருஷ்ணர் எவ்வாறு சூரிய தேவனுக்கு உபதேசித்திருக்க முடியும் என்ற அர்ஜுனனின் கேள்விக்கு, தனது சொந்த விருப்பத்தின்படி தான் பல்வேறு அவதாரங்கள் எடுத்திருப்பதாக அவர் பதிலளித்தார். தர்மம் சீர்குலைந்து அதர்மம் தலைதூக்கும்போது, பக்தர்களைக் காத்து துஷ்டர்களை அழித்து தர்மத்தை மீண்டும் நிலைநாட்டுவதற்காக தான் தோன்றுவதாகவும் தெரிவித்தார். அவ்வாறு அவர் தோன்றும்போது, அவருடைய பிறப்பும் செயல்களும் தெய்வீகமானவை என்பதைப் புரிந்துகொள்பவன் முக்தியடைகிறான்.

பகவத் கீதை உண்மையுருவில் -ஒரு கண்ணோட்டம்

கடமையைச் செய்வதா, துறப்பதா, இரண்டில் எது சிறந்தது என்னும் அர்ஜுனனின் கேள்வியுடன் தொடங்கிய மூன்றாம் அத்தியாயத்தில், கர்ம யோகத்தின் தன்மைகள் குறித்து பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் விளக்கமளித்தார். செயல்படுதல் என்பது அனைவருக்கும் கட்டாயமான ஒன்று, அச்செயல்கள் விஷ்ணுவின் திருப்திக்காகச் செய்யப் படும்போது அவை பந்தத்திலிருந்து விடுவிக்கக்கூடியவை. தன்னை யுணர்ந்த நபருக்குக் கடமைகள் இல்லை, இருப்பினும் மக்களை வழிநடத்து வதற்காக அவர்கள் தங்களது கடமைகளில் ஈடுபடுகின்றனர். சில நேரங்களில் பலவந்தமாக பாவச் செயல்களில் ஒருவர் ஈடுபடுவதற்கு காரணம் என்ன என்று அர்ஜுனன் வினவ, உயிர்வாழிகளின் நித்திய எதிரியான காமமே அதற்குக் காரணம் என்று கிருஷ்ணர் பதிலளித்தார். காமத்தின் பல்வேறு தன்மைகளையும் நிலைகளையும் விளக்கியபின்னர், காமத்தை தெய்வீக ஞானத்தினால் வெல்லு மாறு அர்ஜுனனை அறிவுறுத்தினார்.

Latest

- Advertisement -spot_img