விருந்தாவனத்திற்கு ஸ்ரீல பிரபுபாதர் விஜயம் செய்தபோது, ஒருநாள் மாலை வேளையில், தமது வரவேற்பு அறையில் உபன்யாசம் வழங்கிக் கொண்டிருந்தார். அச்சமயம், குரங்கு ஒன்று அங்கு வைக்கப்பட்டிருந்த வாழைப்பழங்களை நோக்கி பாய்ந்தது. உடனே, விஷாகா தாஸி ஒரு துணியை வீசி பெரும்பாலான வாழைப்பழங்களை குரங்கிடமிருந்து மீட்டாள். இருப்பினும், குரங்கு சில பழங்களை எடுத்துச் சென்று விட்டது.
குருக்ஷேத்திரப் போருக்குப் பின்னர் யுதிஷ்டிர மஹாராஜருக்கு அரியணை ஏற விருப்பமே இல்லை. “எனக்காக எத்தனை மக்கள் போர்க்களத்தில் கொல்லப்பட்டனர், நான் பெரும் பாவம் செய்தவன். அரியணைக்குத் தகுதியற்றவன்,” என்று அவர் எண்ணினார். ஆயினும், சிறந்த மஹாபுருஷர்களான பீஷ்மதேவர், பகவான் கிருஷ்ணர், மற்றும் வியாஸதேவரும் அவரிடம் கூறினர், “இல்லை. உங்களின் மீது பிழையில்லை, போர் நிகழ்ந்தது சரியே! நீங்கள் ஆட்சியை ஏற்றுக்கொள்ளுங்கள்.” அந்த மஹாபுருஷர்கள் யுதிஷ்டிரரின் மீது தவறில்லை என்று கருதியதாலேயே யுதிஷ்டிரர் ஆட்சிப் பொறுப்பை ஏற்றுக் கொண்டார்.
இரவு மணி 9:30. விருந்தாவனத்தில் கோடை கால இரவு வேளையில், ஸ்ரீல பிரபுபாதர் என்னை அவரது அறைக்கு அழைத்து சில சேவைகளை வழங்கிய பின்னர் கூறினார், “நீங்கள் இப்போது ஓய்வெடுக்கச் செல்லலாம்.” அதனைத் தொடர்ந்து, ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்கு முன்பாக நான் எனது பாய், கொசு வலை முதலியவற்றை தயார் செய்ய பதினைந்து நிமிடம் ஆயிற்று. சுமார் பத்து மணி இருக்கும். பிரபுபாதருடைய அறையிலிருந்து சப்தம் கேட்டது.
சீடர்: ஸ்ரீல பிரபுபாதரே, சூதாடுதல், தகாத பாலுறவு கொள்ளுதல், மது அருந்துதல், மாமிசம் உண்ணுதல் முதலிய பாவச் செயல்களில் ஈடுபடுபவர்களை அசுரர்கள் என்று வேதங்கள் வரையறுக்கின்றன. நாம் இவ்வாறு எடுத்துரைப்பதைக் கேட்கும் மக்கள் தங்களை அசுரர்களாக அறிகின்றனர். இதனால் அவர்களது மனம் புண்படுகின்றது.
ஸ்ரீல பிரபுபாதர்: எங்கெல்லாம் எனது புத்தகங்கள் அதிக அளவில் விநியோகிக்கப்படுகின்றனவோ, அங்கெல்லாம் நமது இயக்கத்திற்கு வெற்றி நிச்சயம். மக்கள் அறியாமையில் உள்ளனர்; தற்காலிகமான ஜடவுடலே எல்லாம் என்று கருதுகின்றனர். நிலைமை மிகவும் அச்சமூட்டுவதாக உள்ளது. ஆனால் இந்த புத்தகங்கள் வேதங்களில் வழங்கப்பட்டுள்ள ஆத்ம விஞ்ஞானத்தை நமது ஆன்மீகத் தன்மை மற்றும் நித்திய வாழ்வைப் பற்றிய அறிவைத் தரவல்லவை.