- Advertisement -spot_img

CATEGORY

தீர்த்த ஸ்தலங்கள்

பிரயாகை

வெள்ளை நிற கங்கை நதியும், கருநீல நிற யமுனை நதியும், கண்களுக்குப் புலப்படாமல் பூமிக்கு அடியில் ஓடும் சரஸ்வதி நதியும் ஒன்று கூடுகின்ற இடம் திரிவேணி சங்கமம் என அழைக்கப்படுகின்றது. அமிர்தத் துளிகள் இந்த சங்கமத்தில்தான் சிதறியது என்பதால், இவ்விடத்தில்தான் கும்பமேளாவின் நீராடும் சடங்கு கொண்டாடப்படுகின்றது. காடுகள், இமயமலையின் குகைகள், மற்றும் இந்தியாவின் பல பகுதிகள் மட்டுமின்றி உலகெங்கிலும் இருந்து யாத்ரீகர்கள், யோகிகள், சாதுக்கள் என பலரும் இங்கு வந்து நீராடியுள்ளனர். நாங்கள் மழைக்காலம் முடிந்த தருணத்தில் சென்றதால், கங்கை, யமுனை என இரு நதிகளிலும் நீர்பெருக்கு அதிகமாக இருந்தது. படகில் ஏறி திரிவேணி சங்கமத்தை அடைந்த நாங்கள், அங்கே இரண்டு படகுகளுக்கு இடையில் மூன்றடி ஆழத்தில் மரத்தினால் கட்டப்பட்டிருந்த தளத்தில் நின்றபடி புனித நீராடினோம்.

அலர்நாத்

புரியில் பிறந்த ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத்தை மிகவும் நேசித்தார். இவ்விடம் விருந்தாவனத்திற்கு சமமானது என்றும், இங்குள்ள சிறிய ஏரியானது ராதா குண்டத்திற்கு சமமானது என்றும் அவர் கூறினார். அந்த ஏரியின் கரையில் சைதன்ய மஹாபிரபு ஓய்வெடுப்பதுண்டு. 1929இல் ஸ்ரீல பக்திசித்தாந்தர் அலர்நாத் கோயிலைப் புதுப்பிப்பதற்கும் சுற்றுசுவர் கட்டுவதற்கும் ஏற்பாடுகள் செய்தார். இப்பணியை முடிப்பதில் அவர் எந்த அளவிற்கு பெரும் ஆர்வம் கொண்டார் என்றால், அதற்காக அவர் அங்கு வேலை செய்தவர்களுக்கு பீடி சுருட்டிக் கொடுத்துள்ளார். மேலும், வாமனர், நரசிம்மர், மற்றும் வராஹரின் சிற்பங்களை அவர் கோயிலின் வெளிச்சுவற்றில் பதித்தார்.

ரெமுணா

ரெமுணா என்பது ஒடிஸா மாநிலத்திலுள்ள ஒரு சிறிய கிராமம், ஆனால் எந்நேரமும் பக்தர்கள் வந்து செல்வதால் சுறுசுறுப்பான இடமாகக் காணப்படுகிறது. இவ்வூர் முழுவதுமே க்ஷீர-சோரா கோபிநாதரின் கோயிலை மையமாக வைத்துதான் செயல்படுகிறது. இக்கோயிலின் மற்றொரு சிறப்பம்சம் என்னவெனில், இங்குள்ள மக்கள் பக்தர்களை மகிழ்ச்சி பொங்க வரவேற்பதில் ஆனந்தம் கொள்கின்றனர். இது ரெமுணாவின் நீண்ட காலப் பண்பாட்டை நினைவுபடுத்துகிறது. மாதவேந்திர புரியும் பகவான் சைதன்யரும் எவ்வளவு மரியாதையுடன் வரவேற்கப்பட்டார்கள் என்பதை சைதன்ய சரிதாம்ருதத்திலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

ஜகந்நாத புரி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம். கம்பீரமான...

விருந்தாவனம், கிருஷ்ணரின் லீலா பூமி

சுமார் 5,000 வருடங்களுக்கு முன்பு பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இப்பூவுலகில் தோன்றி லீலைகள் புரிந்த புண்ணிய பூமி, விருந்தாவனம், அல்லது விரஜ மண்டலம் என்று அறியப்படுகிறது. ஸ்ரீ கிருஷ்ணரின் தாமரைத் திருவடிகள் பதிந்த காரணத்தினால், விருந்தாவனத்தைவிட சிறந்த இடம் மூவுலகிலும் இல்லை.

Latest

- Advertisement -spot_img