- Advertisement -spot_img

CATEGORY

தீர்த்த ஸ்தலங்கள்

துவாரகை

முழுமுதற் கடவுளான பகவான் ஸ்ரீ கிருஷ்ணர், இப்பூமியில் 5,000 ஆண்டுகளுக்கு முன்பு தோன்றியபோது, தன்னுடைய லீலையின் பெரும்பாலான காலத்தை துவாரகை என்ற நகரத்தில்தான் கழித்தார். 16,108 உருவங்களாக தன்னை விரிவாக்கம் செய்தது, 16,108 அரண்மனைகளை தன்னுடைய 16,108 இராணியர்களுக்காக உண்டாக் கியது போன்றவை உட்பட பல்வேறு அற்புதமான லீலைகளை அவர் நிகழ்த்தினார். விருந்தாவனத்தில் கிருஷ்ணர் ஓர் எளிய இடையர் குலச் சிறுவனாக வாழ்ந்தார்; ஆனால், துவாரகையில் செல்வச் செழிப்புமிக்க இளவரசராக வாழ்ந்தார். துவாரகை என்றால் “பரமனை அடைவதற்கான வாயில்,” அல்லது “வாயில்கள் நிறைந்த நகரம்” என்பது பொருள். செல்வச் செழிப்புமிக்க நகரத் திற்கு பல வாயில்கள் இருப்பது பாரம்பரிய வழக்கம், இஃது அந்நகரத்தைப் பாதுகாப்பதில் அரசருக்கு இருக்கும் திறமையை வெளிப்படுத்துவதாகும். ஆனால் இன்றைய துவாரகையில், இஸ்கானின் பாதயாத்திரையின் நினை வாகவும் ஸ்ரீல பிரபுபாதரின் நூற்றாண்டு விழாவின் நினைவாகவும் 1988ஆம் ஆண்டு அந்நகரத்தின் முகப்பில், ஸ்ரீல பிரபுபாதர் நுழைவாயில் நிறுவப்படும் வரை, வேறு வாயில்கள் ஏதும் இல்லாமல் தான் இருந்தது.

சித்திரகூடம்

பகவான் ஸ்ரீ இராமர் தன் பத்தினி சீதாதேவியுடனும் தம்பி இலட்சுமணருடனும் சித்திரகூட வனத்தில் பன்னிரண்டு ஆண்டுகள் வாழ்ந்து வந்தார். அவர்கள் இங்கு எவ்வாறு வாழ்ந்தார்கள், என்ன செய்தார்கள் போன்ற தகவல்கள் இராமாயணத்தில் வர்ணிக்கப்பட்டுள்ளன. பகவான் ஸ்ரீ இராமர் பதினான்கு ஆண்டுகள் வனவாசம் செய்ய வேண்டி யிருந்தது. அவர் இலட்சுமணருடனும் சீதாதேவியுடனும் வனத்தில் நுழைந்தபோது, எங்கே தங்க வேண்டும் என்பதை பரத்வாஜ முனிவரிடம் வினவினார். பரத்வாஜ முனிவர் தன்னுடைய ஆஷ்ரமத்தில் இருந்து பத்து மைல் தொலைவிலுள்ள சித்திரகூடத்திற்குச் செல்லுமாறு அறிவுறுத்தினார்.

மதுராவில் வசித்தல்

கவான் ஸ்ரீ கிருஷ்ணர் தனது வசிப்பிடத்தைப் பற்றி பகவத் கீதையில் (15.6) பின்வருமாறு கூறுகிறார்: “எனது அந்த உயர்ந்த இருப்பிடம், சூரியனாலோ, சந்திரனாலோ, நெருப்பினாலோ, மின்சாரத்தாலோ ஒளியூட்டப்படுவது இல்லை. அதனை அடைபவர்கள் ஒருபோதும் இந்த ஜடவுலகிற்குத் திரும்புவதில்லை.” அத்தகு சிறப்புமிக்க கோலோக விருந்தாவனத்தை, பிரம்ம சம்ஹிதையில் (5.29) பிரம்மதேவர் பின்வருமாறு விவரிக்கின்றார்: “விலை மதிப்பற்ற சிந்தாமணிக் கற்களால் அமைக்கப்பட்டுள்ள முழுமுதற் கடவுளின் வசிப்பிடத்தில், விரும்பியதை வழங்கும் கற்பக மரங்கள் நிறைந்துள்ளன. சுரபிப் பசுக்களை பராமரிக்கும் ஆதி புருஷரான கோவிந்தர் அங்கு இலட்சக்கணக்கான கோபியர்களால் தொண்டு செய்யப் படுகிறார்.”

பகவத் கீதை அவதரித்த குருக்ஷேத்திரம்

குருக்ஷேத்திரப் போர் மோக்ஷத ஏகாதசி நாளன்று துவங்கியது. அன்றுதான் கிருஷ்ணர் அர்ஜுனனுக்கு பகவத் கீதையை உபதேசித்தார். ஒவ்வொரு வருடமும் அந்நாள், பகவத் கீதை தோன்றிய நாளாக, குருக்ஷேத்திரத்திலும் பாரதத்தின் பல பாகங்களிலும் கொண்டாடப்படுகிறது. கீதை பேசப்பட்ட இடமான ஜோதிஸரில் இது மிகப்பெரிய விழாவாகக் கொண்டாடப்படுகிறது. இச்சமயத்தில் அகில உலக கிருஷ்ண பக்தி இயக்கத்தின் (இஸ்கானின்) பக்தர்கள், பிரபுபாதர் புத்தக மாரதான் (தொடர் விநியோகம்) என்னும் பெயரில் வருடந்தோறும் பிரபுபாதரின் புத்தகங்களை பெருமளவில் விநியோகிக்கின்றனர். குறிப்பாக, “பகவத் கீதை உண்மையுருவில்” என்னும் புத்தகத்தினை இலட்சக்கணக்கில் இந்தியாவிலும் உலகின் மற்ற பாகங்களிலும் விநியோகிக்கின்றனர்.

Latest

- Advertisement -spot_img