- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

வரதரின் பக்தர்கள்

வைஷ்ணவ திருத்தலங்களின் திருவிக்ரஹ அவதாரங்களில் பல்வேறு தன்னிகரற்ற சிறப்புகளைக் கொண்டவர் காஞ்சி வரதராஜப் பெருமாள். விரும்பிய வரத்தை பக்தர்களுக்கு அருள்புரிவதால் இப்பெருமாளை வரதர் என்று அன்போடு அழைப்பர். வரதரை தரிசிப்பவர்கள் மண்ணுலகின் பாக்கியவான்களாக போற்றப்படுகின்றனர். வரதரின் திவ்யமான லீலைகளைக் கேட்பதன் மூலம் அவர் மீதான அன்பை பெருமளவில் அதிகரித்துகொள்ள இயலும். வரதருக்கும் அவரது பக்தர்களுக்கும் இடையிலான லீலைகள் மிகவும் புகழ் பெற்றவை. வரதரின் தலைசிறந்த பக்தர்களான காஞ்சிபூர்ணர், இராமானுஜர், மற்றும் கூரத்தாழ்வாரிடம் வரதர் மேற்கொண்ட லீலைகளில் சிலவற்றை இங்கு காண்போம்.

வரதரின் வரலாறு

வரதராஜப் பெருமாள் கோயிலின் வரலாறு பல இலட்சக்கணக்கான வருடங்களுக்கு முந்தையதாகும். ஒருமுறை பிரம்மதேவர் பகவான் விஷ்ணுவை சங்கு, சக்கரம், கதை, மற்றும் தாமரையுடன் நான்கு கர உருவில் காண விரும்பி, கடும் தவத்தை மேற்கொண்டார். பிரம்மாவின் பக்தியினால் திருப்தியுற்ற பகவான் நாராயணர் அவருக்காக ஒரு புஷ்கரணியின் வடிவில் தோன்றினார். ஆயினும், திருப்தியடையாத பிரம்மா தமது தவத்தைத் தொடர, பகவான் நாராயணர் ஒரு காட்டின் வடிவில் பிரம்மாவிற்குத் தோன்றினார். அந்தக் காடு இன்று நைமிஷாரண்யம் என்று அறியப்படுகிறது.

உண்மையும் அழகும்

Back to Godhead பத்திரிகையின் (பகவத் தரிசனத்தின் ஆங்கில மூலம்) நவம்பர் 20, 1958 இதழில் வெளியான இந்த சிந்திக்கத் தூண்டும் சுவாரஸ்யமான கட்டுரையில், ‘திரவ அழகு’ என்ற அற்புதமான கதையை ஸ்ரீல பிரபுபாதர் கூறுகிறார். உண்மையின் இயல்பையும் அழகின் இயல்பையும் அவர் தெளிவாக விளக்குகிறார். இந்த விளக்கம் எக்காலத்திற்கும் பொருந்தும் வகையில், உள்ளுறையும் ஆத்மாவை அறிய முற்படுபவர்களுக்கு வியக்கத்தக்க வகையில் பயனுள்ளதாகவும் அமைந்துள்ளது.

இராமர் பாலம் கட்டியவர் எந்த பொறியியல் கல்லூரியில் படித்தார்?

பொறியியல் பட்டம் பெற்றவர்களால் கட்டப்படும் பாலத்தின் நிலை என்ன? இன்றைய வல்லுநர்களால் கட்டப்படும் கட்டிடங்களும் பாலங்களும் குறுகிய காலத்திலேயே சிதிலம் அடைகின்றன என்பதை அன்றாடம் காண்கிறோம். அதே சமயம் சேரர், சோழர், பாண்டியர், பல்லவர் மற்றும் விஜயநகர பேரரசர்களால் கட்டப்பட்ட அணைகளும், கோயில்களும், கோட்டை கொத்தளங்களும், அகழிகளும் பல தலைமுறைகளைக் கடந்து அவர்களது கட்டிடக் கலையின் சிறப்புகளை எடுத்துரைக்கும் வண்ணம் நிற்பது நம்மை பிரமிப்பில் ஆழ்த்துகிறது. இயந்திர சாதனங்கள் ஏதுமில்லாத அக்காலத்தில் இவற்றை எவ்வாறு கட்டியிருக்கக்கூடும் என நாம் தினமும் வியக்கின்றோம்.

ராக்கெட்டுகளில் ஸ்வர்கம் செல்ல முடியுமா?

தற்சமயம் பூமியில் குடிநீர், உணவு தானியங்களை விளைவிப்பதற்கான செழிப்பான நிலம், வசிக்கும் இடம், தூய்மையான காற்று, கச்சா எண்ணெய் முதலிய இயற்கை வளங்களின் பற்றாக்குறை நாளுக்குநாள் அதிகரித்துக் கொண்டே வருகிறது. பிற கிரகங்களுக்கு குடிபெயர்வதன் மூலம் இப்பிரச்சனைகளுக்குத் தீர்வு கிட்டும் என்ற நம்பிக்கையுடன் அதற்கான தீவிர ஆராய்ச்சியில் உலக விஞ்ஞானிகள் ஈடுபட்டுள்ளனர். அவர்களுக்கு நம்பிக்கையூட்டும் வகையில் இம்முயற்சியில் சிறிதளவு முன்னேற்றம் கிட்டியிருப்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் இம்முயற்சியில் அவர்களுக்கு முழு வெற்றி கிட்டும் என்பது நிச்சயமல்ல.

Latest

- Advertisement -spot_img