குணங்களின் மணியான நித்யானந்தர்
(பாடல் தொகுப்பு: சைதன்ய-மங்கல)
வழங்கியவர்: லோசன தாஸ தாகூர்
பகவான் கிருஷ்ணர் இவ்வுலகில் அவதரிக்கும்போது எப்போதும் அவருடன் பகவான் பலராமரும் அவதரிப்பது வழக்கம். அதன்படி, அவர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாக பக்தரின் வடிவில் அவதரித்தபோது பகவான் பலராமரும் பக்தரின் வடிவில் ஸ்ரீ நித்யானந்த பிரபுவாகத் தோன்றினார். கருணையின் அவதாரமான ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவைக் காட்டிலும் ஸ்ரீ நித்யானந்த பிரபு அதிக கருணை வாய்ந்தவராகத் திகழ்ந்து, கலி யுகத்தின் வீழ்ச்சியுற்ற ஆத்மாக்களை விடுவிக்கின்றார். நித்யானந்த பிரபுவின் அவதாரத் திருநாளைக் கொண்டாடும் இத்தருணத்தில், அவரைப் புகழ்ந்து லோசன தாஸ தாகூர் எழுதியுள்ள பல்வேறு பாடல்களிலிருந்து ஒரு பாடலை பகவத் தரிசன வாசகர்களுக்கு வழங்குகிறோம்.
(1)
நிதாஇ குண-மணி ஆமார நிதாஇ குண-மணி
ஆனியா ப்ரேமேர வன்யா பாஸாஇல அவனீ
(2)
ப்ரேமேர வன்யா லஇயா நிதாஇ ஆஇலா கௌஃட-தேஷே
டுபில பகத-கண தீன ஹீன பாஸே
(3)
தீன ஹீன பதித பாமர நாஹி பாசே
ப்ரஹ்மார துர்லப ப்ரேம ஸபாகாரே ஜாசே
(4)
ஆபத்த கருணா-ஸிந்து நிதாஇ காடியா முஹான
கரே கரே புலே ப்ரேம-அமியார பான
(5)
லோசன போலே மோர நிதாஇ ஜேபா நா பஜில
ஜானியா ஷுனியா ஸேஇ ஆத்ம-காதீ ஹஇல
பாடலின் பொருள்
(1) நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், எனது நித்யானந்த பிரபு எல்லா நற்குணங்களின் மணியாவார், அவர் பரவச பிரேமையின் வெள்ளத்தினைக் கொண்டு வந்து முழு உலகையும் அதில் மூழ்கடித்துள்ளார்.
(2) ஸ்ரீ சைதன்யருடைய கட்டளையின்படி ஜகந்நாத புரியிலிருந்து வங்காளத்திற்குத் திரும்புகையில், நித்யானந்த பிரபு அந்த பிரேம வெள்ளத்தினைக் கொண்டு வந்ததன் மூலமாக, பக்த கணங்கள் அனைவரையும் அதில் மூழ்கடித்தார். வீழ்ச்சியுற்ற அபக்தர்கள் அதில் மூழ்காமல் அந்த பரவசக் கடலில் மிதந்து கொண்டிருந்தனர்.
(3) பிரம்மதேவரால்கூட அடைவதற்கு கடினமான அந்த உயர்ந்த பிரேமையினை அதனை விரும்பாத அதற்குத் தகுதியில்லாத வீழ்ச்சியுற்ற மோசமான ஆத்மாக்களுக்கும்கூட நித்யானந்த பிரபு தாராளமாக வழங்கினார்.
(4) முந்தைய காலத்தில் கருணைக் கடல் பலமாக அடைத்து வைக்கப்பட்டிருந்தது, ஆனால் நித்யானந்த பிரபுவோ அதன் எல்லையில் ஒரு கால்வாயினை வெட்டியதன் மூலமாக, அமிர்த பிரேமையின் அந்த வெள்ளம் ஒரு பேரலையாக உருவெடுத்து எல்லா இல்லங்களையும் அடையச் செய்தார்.
(5) லோசன தாஸன் கூறுகிறேன், “எவரேனும் என்னுடைய நிதாயின் வழிபாட்டினைப் புறக்கணித்தால் அல்லது அவர் வழங்கிய இந்த அற்புத வாய்ப்பினை ஏற்றுக்கொள்ள மறுத்தால், அவன் தெரிந்தே தற்கொலை செய்கிறான்.”