- Advertisement -spot_img

TAG

arjuna

கிருஷ்ணரின் திருப்திக்காகப் போர்புரிதல்

வழங்கியவர்: தெய்வத்திரு அ. ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர் தெய்வீக வழிகாட்டுதலின் கீழ் செய்யப்படும் போரும் புகழத்தக்க செயலாகின்றது என்பதை ஸ்ரீல பிரபுபாதர் விளக்குகிறார். அஹோ பத மஹத்-பாபம் கர்தும் வ்யவஸிதா வயம் யத் ராஜ்ய-ஸுக-லோபேன ஹந்தும் ஸ்வஜனம் உத்யதா: “ஐயகோ! மாபெரும் பாவங்களைச்...

கிருஷ்ண உணர்வில் உறுதியைப் பயிலுதல்

ஒருவன் பௌதிகச் செல்வத்தின் இறுதி நிலையை அடைந்தவுடன் துறவிற்கான மனோநிலை அவனுக்கு இயற்கையாகவே வந்துவிடுகிறது.

விஸ்வரூபமா, கிருஷ்ண ரூபமா?

காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.

அர்ஜுனன் திருநங்கையானது ஏன்?

பல்வேறு சிறப்பான அஸ்திரங்களைப் பெற விரும்பிய அர்ஜுனன் அதற்காக தேவலோகம் சென்று தனது தந்தை இந்திரனுடன் வசித்து வந்த காலம். ஒருநாள் இந்திரனின் சபையில் தேவலோக மங்கையான ஊர்வசி நாட்டியம் புரிய, அர்ஜுனன் அவளை உற்று நோக்கிக் கொண்டிருந்தான். அதனை இந்திரனும் கவனித்தார். அர்ஜுனன் ஊர்வசியை விரும்புகிறான் என்று தவறாக நினைத்த இந்திரன், அர்ஜுனனுக்கு நாட்டியம் கற்றுக் கொடுத்த சித்திரசேனனை அழைத்து, அர்ஜுனனுக்காக ஊர்வசியை அனுப்பி வைக்கும்படி கேட்டுக் கொண்டார்.

அர்ஜுனன் கொள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டது ஏன்?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், அவரது 16,108 இராணியர்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தான். அச்சமயத்தில், அவனைத் தாக்கிய கொள்ளையர்கள் அவனது பாதுகாப்பிலிருந்த கிருஷ்ணரின் மனைவியர்களைக் கடத்திச் சென்று விட்டனர். இது தெரிந்த கதை. அந்தக் கொள்ளையர்கள் யார், அர்ஜுனன் அவ்வாறு தோல்வியடைய என்ன காரணம் என்பதே தெரியாத துணுக்கு.

Latest news

- Advertisement -spot_img