- Advertisement -spot_img

TAG

bhakti

நமது பக்தியின் தளம்

இன்று மக்கள் மனதில் பக்தி பெருகுகின்றது. பல மதங்களில் பல ஆலயங்கள் நிர்மாணிக்கப்படுகின்றன. அனைத்து ஆலயங்களிலும் மக்கள் கூட்டம் நிறைந்து காணப்படுகின்றது. நாள், கிழமைகளில் மக்கள் இறைவனின் அருளினை வேண்டி ஆலயங்களுக்குச் செல்கின்றனர் என்று பரவலாக ஒரு பேச்சு உள்ளது. அஃது உண்மையும் கூட. ஆனால் இவ்வளவு மக்கள் இவ்வளவு ஆலயங்களுக்குச் செல்கிறார்களே, அனைவரும் பக்தியில் உண்மையான முன்னேற்றத்தினை அடைந்துள்ளார்களா? அல்லது அதில் எந்தத் தளத்தில் உள்ளனர் என்பதை இந்தக் கட்டுரையில் சிறிது காண்போம்.

பக்தர்கள் ஏன் திரைப்படங்களைப் பார்ப்பதில்லை ?

மக்கள் கிருஷ்ண பக்தர்களைப் பார்த்து அடிக்கடி கேட்கும் கேள்விகளில் ஒன்று, நீங்கள் திரைப்படம் பார்ப்பீர்களா?” பக்தர்கள், இல்லை, நாங்கள் பார்ப்பதில்லை,” என்று கூறியதும், ஏன் பார்க்கக் கூடாது, திரைப்படம் பார்ப்பதால் நமது துன்பங்களை சிறிது நேரத்திற்காவது மறந்து இன்பமாக இருக்கலாமே என்று வினாக்களை எழுப்புகின்றனர். அதைப் பற்றி சிறிது ஆராயலாமே.

பக்தியை விஞ்ஞானபூர்வமாக அணுகலாமே!

விஞ்ஞானம் என்றால் அனுபவபூர்வமான அறிவு என்று பொருள். கிருஷ்ண உணர்வென்பது அனுமானமோ கற்பனையோ அல்ல, இது கணிதத்தைப் போல, அனுபவபூர்வமான அறிவு. கணிதத்தில் இரண்டும்இரண்டும் கூட்டினால், நான்கு. இரண்டையும்இரண்டையும் கூட்டி நான்கிற்கு பதிலாக ஐந்து என்று கூறவியலாது. அமெரிக்கா, இங்கிலாந்து, இந்தியா என எங்குச் சென்றாலும் இரண்டும் இரண்டும்–நான்குதான். இதை அனைவரும் ஒப்புக்கொள்வர்; ஏனெனில், இஃது ஒரு விஞ்ஞானம்.

பக்தித் தொண்டின் மீதான கபிலரின் அறிவுரைகள்

பகவான் கபிலர் தனது அன்னையிடம் தொடர்ந்து விளக்கினார். மனதை ஒருமுகப்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட யோகப் பயிற்சியை மேற்கொள்வதன் மூலம் ஒருவர் மகிழ்ச்சியடைய முடியும், பரம புருஷ பகவானைப் புரிந்துகொள்ளும் வழியில் முன்னேற முடியும். ஒருவர் தனக்கென்று விதிக்கப்பட்டுள்ள கடமைகளை தனது முழுத் திறனையும் பயன்படுத்தி நிறைவேற்ற வேண்டும்.

தீவிரமான பக்தித் தொண்டு

ஆனால் நாம் பல்வேறு தர்மங்களை உருவாக்கி வைத்துள்ளோம், ஜடவுலகில் மகிழ்ச்சியாக இருப்பதற்காக ஒன்றன் பின் ஒன்றாக திட்டங்களைத் தீட்டி வருகிறோம். ஆனால் இந்த உலகம் து:காலயம் அஷாஷ்வதம் (துன்பத்தின் இருப்பிடம்) என்று புருஷோத்தமராகிய முழுமுதற் கடவுளால் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த உலகம் துன்பத்திற்கான இடமாகும், இந்த உடல் துன்பத்திற்கான உடலாகும், இந்த பூமி துன்பத்திற்கான பூமியாகும். ஆனால் நாம் இவற்றைப் புரிந்துகொள்வதில்லை

Latest news

- Advertisement -spot_img