பகவான் கிருஷ்ணர் தமது நண்பனும் பக்தனுமான அர்ஜுனனை உடல் சார்ந்த குழப்பத்திலிருந்து விடுவிக்க அருளிய ஞானமே பகவத் கீதை. இது அர்ஜுனனுக்கு மட்டுமின்றி எல்லா மக்களுக்கும் உதவக்கூடிய வகையில் அருளப்பட்டுள்ளது. பகவத் கீதையின் இந்த ஞானம் சாதாரண மனிதனை பண்பட்ட மனிதனாக மாற்றி, வாழ்வின் மிக முக்கிய பிரச்சனையான பிறப்பு, இறப்பு, முதுமை, நோய் எனும் சக்கரத்திலிருந்து அவனை விடுவிக்கிறது.
1579ஆம் ஆண்டின் கௌர பூர்ணிமா அன்று நரோத்தம தாஸ தாகூர் அவர்கள் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அந்த ஒரு வருடத்தின் புத்தக விநியோகம் குறித்த தகவலை...
உண்மையான பொதுநலத் தொண்டு என்பது தற்காலிகமான விஷயங்களுக்கு அப்பாற்பட்டதாகும், அது மனிதனை அடுத்த பிறவிக்கு தயார் செய்வதாகும், மேலும், அவனுக்கும் கிருஷ்ணருக்குமான ஆதியந்தமற்ற உறவைப் பற்றி நினைவுபடுத்துவதாகும். அந்த பொதுநலத் தொண்டில் கிருஷ்ண பக்தியைப் பற்றிய ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் முதலிடம் வகிக்கின்றன.
ஜட வாழ்வின் துன்பத்தில் தத்தளித்துக் கொண்டிருக்கும் மக்களுக்கு உதவுவதற்காக, ஸ்ரீல பிரபுபாதர் வழங்கிய முக்கியமான கட்டளைகளுள் ஒன்று, அவரது புத்தகங்களையும் பத்திரிகைகளையும் விநியோகம் செய்வதாகும். அக்கட்டளையை நிறைவேற்ற பல்வேறு பக்தர்கள் பலவிதமான முயற்சிகளை மேற்கொள்கின்றனர். வீடுகள், கடைவீதிகள், திருவிழாக்கள், பேருந்து நிலையம், புகைவண்டி நிலையம் போன்ற இடங்களை பல்வேறு யுக்திகளுடன் அணுகி, ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்களை அவர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.