தமிழகத்தில் தேர்தல் களம் கோடையின் வெப்பத்தைக் காட்டிலும் சூடாக உள்ளது. பகவத் தரிசனத்தில் இத்தலைப்பைக் காணும் வாசகர்கள், யாரையேனும் பரிந்துரைக்கப் போகிறோமா என்று நினைக்கலாம். ஆம். மாமன்னர் யுதிஷ்டிரர், அம்பரீஷர் முதலியோரைப் போன்று...
சமுதாயத்தில் நிகழும் ஜாதி ரீதியிலான ஏற்றத்தாழ்வுகளுக்கு கிருஷ்ணரே காரணம் என்றும், அதனால் பகவத் கீதையைப் புறக்கணிக்க வேண்டும் என்றும் அவ்வப்போது சிலர் கூறுகின்றனர். ஆம், மக்களை பிராமணர், சத்திரியர், வைசியர், சூத்திரர் என்று பிரிவுபடுத்தும் வர்ணாஷ்ரம முறையினை வழங்கியவர் கிருஷ்ணரே,
கிருஷ்ணரைப் பற்றி வர்ணிக்கையில் சாஸ்திரங்கள் பரம என்னும் சொல்லை அடிக்கடி பயன்படுத்துகின்றன. பரம என்றால் உன்னதமானவர், ஈடுஇணையற்றவர், உயர்ந்தவர், முதன்மையானவர் என்று பொருள் கூறலாம். ஈஷ்வர: பரம: க்ருஷ்ண: என்று பிரம்ம சம்ஹிதை கூறுகிறது. அதாவது, கட்டுப்படுத்துபவர்களில் கிருஷ்ணரே பரமன், அவருக்கு ஈடுஇணை யாரும் கிடையாது. மேலும், கிருஷ்ணர் ஈடுஇணையற்ற நபர் (பரம புருஷர்), ஈடுஇணையற்ற புகலிடம் (பரந்தாமர்), ஈடுஇணையற்ற பிரம்மன் (பர பிரம்மன்) என்று பல வழிகளில் வர்ணிக்கப்பட்டுள்ளார்.
காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.
கிருஷ்ண உணர்வு முற்றிலும் ஆனந்தம் நிறைந்தது; ஏனெனில், அனைத்து பெளதிகத் துன்பங்களிலிருந்தும் விடுதலைப் பெற்ற பின்னரே ஒருவன் இந்நிலையை அடைகிறான். இதுவே ப்ரஹ்ம-பூத நிலை என்று அறியப்படுகிறது. பன்னெடுங் காலமாக சிறைச்சாலையில் துன்பப்படுபவன் திடீரென விடுதலையடையும்போது மிகுந்த மகிழ்ச்சியை உணர்வதைப் போலவே, ப்ரஹ்ம-பூத நிலையை அடைபவன் ஆனந்தத்தை அனுபவிக்கிறான்.