ஒருமுறை பிரபுபாதர் கண்களை மூடிக் கொண்டு நன்றாக சாய்ந்தபடி இலகுவாக அமர்ந்தபடி, மாயாவாதக் கொள்கையைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் தத்துவ அறிஞர்கள், “நான் கடவுள், நீ கடவுள், நாம் அனைவரும் கடவுள்,” என்று கூறுவதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களுடைய பல்வேறு அபத்தங்களை எடுத்துரைத்து கண்டித்தபடி, இரண்டு தவளைகளின் கதை ஒன்றினைக் கூறினார்.
—கிஷோரி தாஸியின் பேட்டியிலிருந்து
குழந்தைகளை எவ்வாறு நடத்த வேண்டும் என்பதுகுறித்து ஸ்ரீல பிரபுபாதர் என்னிடம் பல விஷயங்களைக் கூறியுள்ளார். அவர் கூறிய வேத வழிமுறை, வைஷ்ணவ முறை என்பது எங்களது கலாச்சாரத்திற்கு முற்றிலும் மாறுபட்டதாக...
ஸ்ரீல பிரபுபாதர் மும்பையில் இருந்தபோது, பக்தர்களால் அவரை எளிதில் அணுகி, தங்களது கேள்விகளை எழுப்ப முடிந்தது. இருப்பினும், இயக்கம் வளரவளர தமது ஆன்மீக குருவுடன் இது போன்ற நெருங்கிய உறவுகள் கிட்டுமா என்பதில் பஞ்சத்ராவிட ஸ்வாமிக்கு ஐயம் ஏற்பட்டது. அதனை ஸ்ரீல பிரபுபாதரிடமே கேள்வி எழுப்பி விடலாம் என்று எண்ணி, ஒருநாள் அவர் ஸ்ரீல பிரபுபாதரின் அறைக்குச் சென்றார்.
ஸ்ரீல பிரபுபாதர் சில நேரங்களில் தமது உபன்யாசத்தின்போது பரவசத்தில் மூழ்கி விடுவார். ஒருமுறை சான்பிரான்சிஸ்கோவில் கிருஷ்ணரின் பிரிவில் இருந்த ஸ்ரீ சைதன்யரின் பாவத்தை எடுத்துரைத்தபோது அவ்வாறு நிகழ்ந்தது. இந்தியாவின் கோரக்புரிலும் ராதா-மாதவ விக்ரஹங்களுக்கு முன்பாக அமர்ந்து கிருஷ்ண லீலைகளை விவரிக்கையில் நிகழ்ந்தது, மீண்டும் லாஸ்ஏஞ்சல்ஸ் நகரில் உபன்யாசத்தின்போது நிகழ்ந்தது. அத்தருணங்களில், அவரது உணர்வில் ஒரு தெளிவான மாற்றம் காணப்பட்டது.
புரோக்லின் நகரின் கிழக்கு நதிக்கரையில் காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்ட பின்னர், ஸ்ரீல பிரபுபாதரும் நானும் ஹென்றி தெருவில் உள்ள நமது கோயிலுக்கு காரில் திரும்பினோம். கோயிலுக்குள் நுழைவதற்கு சற்று முன்பாக, வீதியின் ஓரத்தில் ஒரு காட்சியைக் கண்டோம். அங்கே சிறுவன் ஒருவன் தபால் பெட்டியில் தபால் போட முயன்றான், அவனுடன் வந்திருந்தவர் அவனைத் தூக்கி அவனுக்கு உதவினார். அக்காட்சி ஐந்து அல்லது பத்து நொடிகள் மட்டுமே இருந்திருக்கும். ஆயினும், காரில் இருந்தபடி அதைக் கண்ட பிரபுபாதர் அக்காட்சியில் ஆழ்ந்தார். அவரது கண்கள் பெரிதாகி, பிரகாசமாயின, அவரது கவனத்தில் அக்காட்சி மட்டுமே இருந்தது.