கடவுளைக் காண விரும்பிய தவளைகள்

Must read

—லோசானந்த தாஸரின் பேட்டியிலிருந்து

ஒருமுறை பிரபுபாதர் கண்களை மூடிக் கொண்டு நன்றாக சாய்ந்தபடி இலகுவாக அமர்ந்தபடி, மாயாவாதக் கொள்கையைப் பற்றி பேசத் தொடங்கினார். அதன் தத்துவ அறிஞர்கள், “நான் கடவுள், நீ கடவுள், நாம் அனைவரும் கடவுள்,” என்று கூறுவதை விளக்கிக் கொண்டிருந்தார். அவர்களுடைய பல்வேறு அபத்தங்களை எடுத்துரைத்து கண்டித்தபடி, இரண்டு தவளைகளின் கதை ஒன்றினைக் கூறினார்.

கடவுளைப் பற்றிக் கேள்விப்பட்ட இரண்டு தவளைகள் கடவுளை தங்களது அனுபவத்தால் காண விரும்பின. அருகிலிருந்த குச்சி ஒன்றின் மீது ஏறிக் கொண்டு, அவை மேலும்கீழும் குதிக்கத் தொடங்கின. குதித்துவிட்டு கூறின, “இது கடவுள் இல்லை, இது நமக்கு எந்த பதிலும் சொல்லவில்லை.”

அடுத்ததாக, அவை ஒரு கல்லின் மீது ஏறி குதிக்கத் தொடங்கின, கல்லும் பதிலளிக்கவில்லை. அப்போது அவை கூறின, “இஃது எப்படி கடவுளாக இருக்க முடியும்?” இவ்வாறு அவை பேசிக் கொண்டிருக்க, அங்கே ஒரு கொக்கு வந்தது.

இதுவரை கதையை சகஜமாகக் கூறிக் கொண்டிருந்த பிரபுபாதர், அத்தருணத்தில் கொக்கினைப் போன்று நடித்துக் காட்டத் தொடங்கினார். அவர் தமது கரங்களை பறவையின் நீண்ட கால்களாக பாவித்து நடிக்கத் தொடங்கினார், சிறிது நேரத்தில், ஒரு கையினை பறவையின் நீண்ட மூக்கினைப் போன்று பாவித்தார்.

பிரபுபாதருடைய கண்கள் மிகவும் பெரியதாயின, அவரது முகத்தில் நகைச்சுவையின் வெளிப்பாடு நிரம்பியிருந்தது. அவர் தனது கையினால் சைகை காட்டி இரண்டு தவளைகளையும் பார்த்துவிட்டு கூறினார், “கொக்கு தவளையை விழுங்கி விட்டது, இரண்டாவது தவளையையும் விழுங்கி விட்டது.”

அங்கே நான் அரவிந்தருடனும் சியாமசுந்தரருடனும் சேர்ந்து சமணமிட்டு அமர்ந்திருந்தேன். தீவிரமான தத்துவ உரையாடலை கேட்டுக் கொண்டிருந்த சமயத்தில், பிரபுபாதர் தமது கரங்களால் தவளைகளை உண்பதுபோன்று நடித்துக் காட்டினார். அக்காட்சியைக் கண்ட என்னால் சிரிப்பை அடக்க முடியவில்லை, பின்னால் சாய்ந்து உருள ஆரம்பித்து விட்டேன், கால்கள் மேலே போய்விட்டன.

பிரபுபாதரும் இதர இரண்டு ஆன்மீக சகோதரர்களும்கூட சிரிக்கத் தொடங்கினார், ஆனால் அவர்களோ என்னைப் பார்த்து சிரித்துக் கொண்டிருந்தனர்.

ஜய ஸ்ரீல பிரபுபாத!!!

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives