பெளதிக உலகில் நாம் பல்வேறு விதமான வாழ்க்கை நிலைகளில் இருக்கின்றோம். கல்வியைப் பொறுத்தவரை, சிலர் M.A., சிலர் B.A., சிலர் மூன்று வருட பள்ளிக்கல்வி, சிலர் நான்கு வருடக் கல்வி என்று உள்ளனர். இவ்வாறு கல்வியில் வேறுபட்ட படித்தரங்கள் உள்ளன. இவற்றில் மிகவுயர்ந்த நன்மையளிப்பதாக, மிகச்சிறந்ததாக—அதாவது முதலிடத்தில் இருப்பது எது? மிகச்சிறந்த கல்வி—ராஜ வித்யா—கிருஷ்ண உணர்வே. நான் யார் என்பதைப் புரிந்துகொள்வதே உண்மையான அறிவு. இதனை உணராத வரை நாம் அறிவற்றவர்களே.
மனம் ஸத்வ குண பரிமாற்றத்தினால் உருவானது என்பதால், அது பெளதிகமானதாகும். பல்வேறு பெளதிக ஆசைகளினால் களங்கமடைந்து, மனம் படிப்படியாக இழிவடைகிறது. காம ஏஷ க்ரோத ஏஷ ரஜோ-குண-ஸமுத்பவ:. மனம் இழிவடையும்போது, அது ஸத்வ குணத்திலிருந்து ரஜோ குணத்திற்கு வருகிறது.
அவ்யக்தோ ’க்ஷர இத்யுக்தஸ் தம் ஆஹு: பரமாம் கதிம் யம் ப்ராப்ய ந நிவர்தந்தே தத் தாம பரமம் மம “எதனை தோற்றமற்றதாகவும் அழிவற்றதாகவும் வேதாந்திகள் கூறுகின்றனரோ, எது பரம கதியாக அறியப்படுகின்றதோ, எந்த இடத்தை அடைந்தவன் மீண்டும் திரும்பி வருவதில்லையோ, அதுவே எனது உன்னத இருப்பிடம்.” (பகவத் கீதை 8.21)