AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

அர்ஜுனன் கொள்ளையர்களால் தோற்கடிக்கப்பட்டது ஏன்?

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் இவ்வுலகை விட்டு மறைந்த பின்னர், அவரது 16,108 இராணியர்களை அழைத்துக் கொண்டு அர்ஜுனன் ஹஸ்தினாபுரத்திற்குச் சென்று கொண்டிருந்தான். அச்சமயத்தில், அவனைத் தாக்கிய கொள்ளையர்கள் அவனது பாதுகாப்பிலிருந்த கிருஷ்ணரின் மனைவியர்களைக் கடத்திச் சென்று விட்டனர். இது தெரிந்த கதை. அந்தக் கொள்ளையர்கள் யார், அர்ஜுனன் அவ்வாறு தோல்வியடைய என்ன காரணம் என்பதே தெரியாத துணுக்கு.

வேதங்களின் காலக் கணிதம்

நவீன கால விஞ்ஞானிகள் இந்த உலகம் எப்போது தோன்றியது, எப்போது மறைகிறது முதலியவை குறித்து பல்வேறு கற்பனையான கருத்துகளை முன்வைக்கின்றனர். உலகத்தின் தோற்றத்தையும் மறைவையும் பற்றி அறிந்துகொள்ள விழைவது மனிதனின் இயற்கையே. ஆயினும், நமது எல்லைக்குட்பட்ட அறிவை வைத்து அதனைத் தெரிந்துகொள்ள இயலாது. இவ்விஷயங்கள் அனைத்தும் வேத சாஸ்திரங்களில் (குறிப்பாக சூரிய சித்தாந்தத்தில்) தெள்ளத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைப் பற்றிய ஒரு சிறு தகவலை பகவத் தரிசன வாசகர்களுக்குப் படைக்கின்றோம்.

பகவான் ஜகன்நாதர்

ஸத்ய யுகத்தில் வாழ்ந்த மாமன்னர் இந்திரத்யும்னர் பகவான் விஷ்ணுவின் பரம பக்தராக இருந்தார். ஒருமுறை அவரது அவைக்கு விஜயம் செய்த பிராமணர் ஒருவர் புருஷோத்தம க்ஷேத்திரம் எனும் புனித ஸ்தலத்தைப் பற்றி மன்னரிடம் எடுத்துரைத்தார்.

கொவ்வூர்

பகவான் ஸ்ரீ கிருஷ்ணர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவாகத் தோன்றியபோது அவரது நித்திய சகாக்களும் அவருடன் இணைந்து தோன்றினர். அவர்களுள் இராமானந்த ராயர் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவின் மிக நெருங்கிய பக்தராகத் திகழ்ந்தார். அவர் ஒடிஸாவில் பவானந்த ராயருடைய ஐந்து மகன்களில் ஒருவராகத் தோன்றினார். இராகவேந்திர புரியின் சீடராகக் கருதப்படும் இவர் இயற்கையாகவே ஒரு தூய பக்தராக இருந்தார். முன்பு வித்யா நகரம் என்றழைக்கப்பட்ட தற்போதைய ராஜமுந்திரி மாகாணத்தின் ஆளுநராக பிருதாபருத்ர மன்னரின் கீழ் அவர் பணியாற்றி வந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு சந்நியாசம் ஏற்ற பிறகே இராமானந்த ராயர் மஹாபிரபுவின் லீலைகளினுள் வருகிறார்.

நாரதர் எங்கும் பயணம் செய்வது ஏன்?

தெரிந்த கதை தெரியாத துணுக்கு மாபெரும் பக்தரான நாரதர் பூலோகம், ஸ்வர்க லோகம், வைகுண்டம் என எல்லா இடங்களுக்கும் செல்வதால், திரிலோக சஞ்சாரி என்று அழைக்கப்படுகிறார். இது தெரிந்த கதை. அவர் ஓரிடத்தில் தங்காமல்...

Latest