AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

இந்திரன் பிருஹஸ்பதியை அவமதித்தல்

வழங்கியவர்: வனமாலி கோபால தாஸ் அனைத்து வேதங்களையும் தொகுத்த ஸ்ரீல வியாஸதேவர், அவற்றின் தெளிவான சாராம்சத்தை, வேத இலக்கியம் எனும் மரத்தின் கனிந்த பழத்தை ஸ்ரீமத் பாகவதத்தின் வடிவத்தில் நமக்கு வழங்கியுள்ளார். இது 12...

பாற்கடலைக் கடைதல்

ஒருமுறை வைகுண்டத்திலிருந்து திரும்பிய துர்வாஸ முனிவர் இந்திரனுக்கு மகிழ்ச்சியுடன் ஒரு மலர்மாலையை வழங்கினார். கர்வத்தினால் மதிமயங்கிய இந்திரன் அதனைத் தனது யானைக்கு வழங்க, யானை விளையாட்டாக மாலையை தரையில் போட்டு நசுக்கியது.

ஸ்ரீ மாயாபுரைக் கண்டுபிடித்தல்

ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு அவதரித்த மாயாபுர் அல்லது நவத்வீபம் எனப்படும் ஊரானது கிபி 1800ம் ஆண்டுவாக்கில் கிட்டத்தட்ட மறைந்து போய்விட்டது. மேலும், பகவான் சைதன்யரின் தத்துவங்களை முறையாக அறிந்தவர்கள் வெகு சிலரே இருந்தனர். அம்மாதிரியான நபர்களில் ஒருவர்தான் பிரபுபாதரின் ஆன்மீக குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூரின் தந்தையான ஸ்ரீல பக்திவினோத தாகூர் ஆவார். ஸ்ரீல பக்திவினோத தாகூர் முறையான சீட பரம்பரையில் பகவான் சைதன்யரின் உபதேசங்களை ஸ்ரீல ஜகந்நாத தாஸ பாபாஜி மஹாராஜரிடமிருந்து பெற்றிருந்தார். ஸ்ரீ சைதன்ய மஹாபிரபுவை உண்மையாகப் பின்பற்றுபவர் என்ற வகையில், ஸ்ரீல பக்திவினோத தாகூர் பகவான் ஸ்ரீ சைதன்யர் அவதரித்த இடத்தைத் தேடிக் கண்டுபிடிக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.

விஸ்வரூபமா, கிருஷ்ண ரூபமா?

காட்சி: சுமார் ஐயாயிரம் வருடத்திற்கு முந்தைய குருக்ஷேத்திர பூமி. இன்றைய புதுதில்லிக்கு வடமேற்கில் சுமார் நூறு மைல் தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலத்தில், அரச பரம்பரையினர் அனைவரும் ஒரு கொடிய போருக்காக அணிவகுத்து காத்திருந்த தருணம். திடீரென்று ஒரேயொரு ரதம் மட்டும் இரண்டு சேனைகளுக்கும் இடையில் தனியாக வந்து நின்றது. அதில் அப்போரின் முக்கிய நாயகனான அர்ஜுனனும் அவனது சாரதியாக பகவான் கிருஷ்ணரும் இருந்தனர். தனது நண்பர்கள், உறவினர்கள், குருமார்கள் என எதிர்த்தரப்பில் நின்று கொண்டிருந்தவர்களைக் கண்டு, பாசத்தினால் மயங்கி, அவர்களை எவ்வாறு கொல்வது என்பதில் குழப்பமுற்ற அர்ஜுனன் தனது நண்பரான கிருஷ்ணரை குருவாக ஏற்று அவரிடமிருந்து வழிகாட்டுதலைப் பெற விரும்பினான். அத்தருணத்தில் பகவத் கீதை எனப்படும் காலத்திற்கு அப்பாற்பட்ட உன்னத உபதேசங்களை பகவான் அருளினார்.

Latest