- Advertisement -spot_img

CATEGORY

வகைப்படுத்தப்படாதது

ஜபம் செய்வது எப்படி?

க்ருஷ்ண-நாம-மஹா-மந்த்ரேர ஏஇத ஸ்வபாவ ஜே ஜபே-தார க்ருஷ்ணே உபஜயே பாவ ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தின் இயல்பு யாதெனில், இதை யார் ஜபித்தாலும், உடனடியாக கிருஷ்ணரின் மீதான பேரன்பு வளரும்." (சைதன்ய சரிதாம்ருதம், ஆதி லீலை 7.83) ஒவ்வோர் உண்மையான கிருஷ்ண பக்தரும் ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை ஜபித்தல் அவசியம். நாம் பல பணிகளில் மும்முரமாக இருந்தாலும், ஹரே கிருஷ்ண ஜபம் செய்வதற்காக தினமும் ஒரு குறிப்பிட்ட நேரத்தை ஒதுக்குதல் அவசியம்.

அரிது அரிது மானிடராய் பிறத்தல் அரிது

பந்தப்பட்ட ஆத்மாக்களுக்கு மனித உடலை அடைவது மிகமிக கடினமாகும், அப்படியே அடைந்தாலும், அதை எந்த நொடியிலும் இழந்துவிடக் கூடும். ஆனால் மனித வாழ்வைப் பெற்றவர்கள்கூட, வைகுண்ட நாதருக்கு பிரியமான தூய பக்தர்களின் சகவாசத்தை அரிதாகவே பெறுகின்றனர்.” (ஸ்ரீமத் பாகவதம் 11.2.29) பற்பல பிறவிகளைக் கடந்தபின், உண்மையான அறிவுடையவன் எல்லா காரணங்களுக்கும் காரணமாக, எல்லாமாக என்னை அறிந்து, என்னிடம் சரணடைகிறான். அத்தகைய மகாத்மா மிகவும் அரிதானவன்.” (பகவத்கீதை 7.19)

ஹிரண்யகசிபுவின் பிறப்பு

பிரகலாதரின் தந்தை ஹிரண்யகசிபு ஒரு மாபெரும் அசுரன் என்பது அனைவருக்கும் தெரிந்த கதை. ஆனால் அவன் ஒரு மிகச்சிறந்த பிராமணருக்கு பிறந்தவன் என்பதும் எப்படி அசுரனாக...

பாகுபலியும் மஹாபாரதமும்

பாகுபலிக்கும் பகவத் தரிசனத்திற்கும் என்ன சம்பந்தம் என்று நீங்கள் நினைக்கலாம். பாகுபலியையும் மஹாபாரதத்தையும் ஒப்பிடப் போகிறார்களோ என்றும் நினைக்கலாம். இல்லை. பாகுபலியின் காய்ச்சல் மக்களிடம் சற்று தணிந்துள்ள இவ்வேளையில், அதைக் காட்டி சில போதனைகளை உரைத்தால், யாம் கூறுவதை மக்கள் காது கொடுத்து கேட்பர் எனும் நம்பிக்கையில் பாகுபலி பகவத் தரிசனத்திலும் நுழைந்துள்ளது.

வேதங்களின் காலக் கணிதம்

நவீன கால விஞ்ஞானிகள் இந்த உலகம் எப்போது தோன்றியது, எப்போது மறைகிறது முதலியவை குறித்து பல்வேறு கற்பனையான கருத்துகளை முன்வைக்கின்றனர். உலகத்தின் தோற்றத்தையும் மறைவையும் பற்றி அறிந்துகொள்ள விழைவது மனிதனின் இயற்கையே. ஆயினும், நமது எல்லைக்குட்பட்ட அறிவை வைத்து அதனைத் தெரிந்துகொள்ள இயலாது. இவ்விஷயங்கள் அனைத்தும் வேத சாஸ்திரங்களில் (குறிப்பாக சூரிய சித்தாந்தத்தில்) தெள்ளத் தெளிவாகக் கொடுக்கப் பட்டுள்ளன. அவற்றைப் பற்றிய ஒரு சிறு தகவலை பகவத் தரிசன வாசகர்களுக்குப் படைக்கின்றோம்.

Latest

- Advertisement -spot_img