புலியா தோமாரே

Must read

பக்திவினோத தாகூர் வழங்கிய பாடல்

பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது.

(1)

புலியா  தோமாரே,  ஸம்ஸாரே  ஆஸியா,

பேயே  நானா-வித  ப்யதா

தோமார  சரணே,  ஆஸியாசி  ஆமி,

போலிபோ  து:கேஹேர  கதா

(2)

ஜனனீ  ஜடரே,  சிலாம  ஜகோன,

பிஷம  பந்தன-பாஷே

ஏக-பார  ப்ரபு!  தேகா  தியா  மோரே,

வஞ்சிலே  ஏ  தீன  தாஸே

(3)

தகோன  பாவினு,  ஜனம  பாஇயா,

கரிபோ  பஜன  தவ

ஜனம  ஹஇல,  பஃடி’  மாயா-ஜாலே,

நா  ஹஇல  ஜ்ஞான-லவ

(4)

ஆதரேர  சேலே,  ஸ்வ-ஜனேர  கோலே,

ஹாஸியா  காடானு  கால

ஜனக  ஜனனீ-  ஸ்னேஹேதே  புலியா,

ஸம்ஸார  லாகிலோ  பாலோ

(5)

க்ரமே  தின  தின,  பாலக  ஹஇயா,

பேலினு  பாலக-ஸஹ

ஆர  கிசு  தினே,  ஜ்ஞான  உபஜில,

பாட  போஃடி  அஹர்-அஹ:

(6)

வித்யார  கௌரவே,  ப்ரமி’  தேஷே  தேஷே,

தன  உபர்ஜன  கரி

ஸ்வ-ஜன  பாலன,  கரி  ஏக-மனே,

புலினு  தோமாரே,  ஹரி!

(7)

பார்தக்யே  ஏகோன,  பகதிவினோத,

காதியா  காதர  அதி

நா  பஜியா  தோரே,  தின  ப்ரி’தா  கேல,

ஏகோன  கி  ஹபே  கதி?

பாடலின் பொருள்

(1) எம்பெருமானே, உங்களை மறந்து இந்த பெளதிக உலகத்தினுள் வந்து, நான் பலவிதமான துன்பங்களை அனுபவித்து வருகிறேன், இப்போது உங்களது தாமரைத் திருவடிகளை அணுகி எனது துன்பக் கதையைக் கூற உள்ளேன்.

(2) அன்னையின் கருவில் வலி மிகுந்த கூண்டினுள் நான் பந்தப்பட்டிருந்தபோது, பிரபுவே, ஒருமுறை நீங்கள் எனக்கு காட்சியளித்தீர்கள். கண நேர தரிசனத்தை வழங்கிவிட்டு, உங்களது சேவகனைப் புறக்கணித்து விட்டீர்.

(3) அச்சமயத்தில் நான் எண்ணினேன், “இம்முறை பிறந்த பின்னர், ஒருமுகப்படுத்தப்பட்ட கவனத்துடன் நிச்சயமாக உங்களை வழிபடுவேன்.” ஆனால், ஐயகோ! பிறந்த பின்னர், உலக மயக்கம் என்னும் வலையில் மாட்டிக் கொண்டேன், ஒரு துளி உண்மை அறிவைக்கூட நான் பெறவில்லை.

(4) ஒரு செல்லக் குழந்தையாக உறவினர்களின் மடியில் தவழ்ந்தேன், சிரித்துசிரித்து காலத்தைக் கழித்தேன். எனது தாய்தந்தையர் என்னிடம் காட்டிய பாசம் உங்களை மேன்மேலும் மறக்கச் செய்தது, இந்த உலகம் நல்ல இடமே என்று எண்ணத் தொடங்கினேன்.

(5) படிப்படியாக நாள்தோறும் நான் ஒரு பாலகனாக வளர்ந்தேன், இதர பாலகர்களோடு விளையாடத் தொடங்கினேன். விரைவில் எனது அறிவு வளரத் தொடங்கியது, ஒவ்வொரு நாளும் பள்ளிப்பாடங்களை கவனமுடன் படித்தேன்.

(6) எனது கல்வியின் கர்வத்தினால் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து சொத்து சேகரித்தேன். அதன் மூலமாக எனது குடும்பத்தை ஒருமுகப்படுத்தப்பட்ட மனதுடன் பராமரித்தேன், பகவான் ஹரியே உம்மை மறந்து அவற்றைச் செய்தேன்!

(7) இப்போது வயோதிகப் பருவத்தில் இந்த பக்திவினோதன் மரணம் அணுகும் தருணத்தில் மிகுந்த வருத்தத்துடன் அழுகிறான். பிரபுவே, நான் உங்களை வழிபடத் தவறி விட்டேன், எனது நாள்களை வீணாகக் கழித்து விட்டேன். இப்போது என்னுடைய கதி என்னவாகும்?

[piecal view="Classic"]

More articles

spot_img

Latest article

Archives