- Advertisement -spot_img

TAG

holy place

கோல்கத்தா

கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தின் அச்சாணியாக திகழ்ந்த கெளடீய வைஷ்ணவ ஆச்சாரியர்களில் ஒருவரான ஸ்ரீல பக்திவினோத தாகூர் இவ்வுலகில் தோன்றுவதற்கும் இறுதியாக கிருஷ்ணரின் நித்திய லீலையில் மீண்டும் நுழைவதற்கும் கோல்கத்தா நகரையே தேர்ந்தெடுத்தார். ஸ்ரீல பிரபுபாதரின் குருவான ஸ்ரீல பக்திசித்தாந்த சரஸ்வதி தாகூர் இவ்வுலகை விட்டுப் பிரிவதற்கு கோல்கத்தாவையே தேர்ந்தெடுத்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. சைதன்ய மஹாபிரபு கிருஷ்ண உணர்வைப் பிரச்சாரம் செய்யும்படி நித்யானந்த பிரபுவிடம் கட்டளையிட்டபோது, நித்யானந்த பிரபு கோல்கத்தாவை மையமாக வைத்தே செயல்பட்டார். நித்யானந்த பிரபு கோல்கத்தாவிற்கு அருகிலிருக்கும் கர்தஹா என்னுமிடத்தில் இல்லத்தை ஏற்படுத்தி முழு வீச்சில் தீவிரமாக கிருஷ்ண உணர்வு பிரச்சாரத்தில் ஈடுபட்டார். சைதன்ய மஹாபிரபு இன்றைய கோல்கத்தா நகருக்கு அருகில் வசித்த பாகவத ஆச்சாரியரிடமிருந்து தொடர்ச்சியாக ஏழு நாள் ஸ்ரீமத் பாகவதத்தைப் பாட்டு வடிவில் கேட்டதால், கெளடீய வைஷ்ணவர்கள் இவ்விடத்தை குப்த விருந்தாவனம் என்றும் போற்றுகின்றனர்.

ஜகந்நாத புரி

வழங்கியவர்: ஜீவன கௌரஹரி தாஸ் ஒடிசா தலைநகர் புவனேஸ்வரில் இருந்து 60 கி.மீ தொலைவில் அழகான கடற்கரை ஓரத்தில் அமைந்திருப்பது ஸ்ரீ ஜகந்நாத புரி க்ஷேத்திரம். கம்பீரமான ஜகந்நாதர் வீற்றிருக்கும் இந்த க்ஷேத்திரத்திற்கு, ஸ்ரீ...

Latest news

- Advertisement -spot_img