AUTHOR NAME

wadminw

185 POSTS
0 COMMENTS

குவலயாபீட யானை

அசுரர்களின் மன்னன் கம்சன் மல்யுத்தத்திற்காக மதுராவில் மாபெரும் ஏற்பாடுகளைச் செய்திருந்தான். விழாவில் பங்கு பெற கிருஷ்ண-பலராமருக்கும் அழைப்பு விடுத்தான்.

பகவானின் பேராசை

பகவான் ஸ்ரீ கிருஷ்ண சைதன்ய மஹாபிரபு யுக தர்மமான ஹரி நாம ஸங்கீர்த்தனத்தைப் பரப்புவதற்காகவும் அதன் மூலம் கிருஷ்ண பிரேமையை தாராளமாக வழங்குவதற்காகவும், இக்கலி யுகத்தில் மறைக்கப்பட்ட அவதாரமாகத் தோன்றினார். இதுவே அவர் தோன்றியதற்கான காரணம் என்று வெளிப்படையாக அறியப்படுகிறது; ஆயினும், கிருஷ்ண லீலையில் தம்மால் நிறைவேற்றிக்கொள்ள இயலாத மூன்று பேராசைகளே அவர் மஹாபிரபுவாக தோன்றியதற்கான அந்தரங்க காரணம் என்று கூறப்படுகிறது. அதாவது, பகவான் இவ்வுலகில் தோன்றுவதற்கும் பேராசையே முக்கிய காரணமாக அமைகிறது. பூரண புருஷோத்தமராகிய பகவான் தன்னில் திருப்தியுற்றவர், அவருக்கென்று எந்த தேவையும் இருப்பதில்லை. அவர் ஆறு ஐஸ்வர்யங்களை (வளங்களை) பூரணமாகக் கொண்டவர்.

மஹாபிரபுவின் மகத்துவ லீலைகள்

பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது தென்னிந்திய யாத்திரையில் சாதுர்மாஸ்ய காலத்தில் நான்கு மாதங்கள் திருவரங்கத்தில் தங்கியிருந்த காலம் அது. அவர் நாள்தோறும் காவிரியில் நீராடி அரங்கனை தரிசித்து மகிழ்ச்சி வெள்ளத்தில் ஆடிப்பாடுவார். அவரது திருமேனியின் அழகையும் பரவசத்தையும் கண்டு அனைவரும் ஆச்சரியமடைந்தனர். பல்லாயிரக்கணக்கான மக்கள் அவரைக் காண்பதற்காகவும் அவருடன் இணைந்து ஹரே கிருஷ்ண கீர்த்தனத்தில் பாடுவதற்காகவும் திருவரங்கத்தில் கூடினர்.

இலக்ஷ்மணரின் உயர்ந்த நெறி

இலக்ஷ்மணரின் உயர்ந்த நிலையைப் பாருங்கள். பன்னிரண்டு வருடங்கள் வேறு யாருமின்றி தனியாக சீதா-இராமருடன் இருந்தபோதிலும், மதிப்பிற்கும் மரியாதைக்குமுரிய பிராட்டியாரை கவனமாக ஏறெடுத்தும் பார்த்ததில்லை; மாறாக, என்றென்றும் அவளது தாமரைத் திருவடிகளை தமது தியானத்தில் அமர்த்தியிருந்தார். அவருடைய பக்தியையும் பணிவையும் ஒழுக்கத்தையும் என்னவென்று சொல்வது! நினைத்துப் பூரித்தலே ஆனந்தமளிப்பதாக உள்ளது.

மாமன்னர் பரீசஷித்

மாமன்னர் பரீக்ஷித் காட்டிற்கு வேட்டையாடச் சென்றார். அங்கு ஓர் மானை பின்தொடர்ந்து நெடுந்தூரம் சென்றதால் களைப்படைந்தார், தாகத்திற்காக நீரைத் தேடி சமிக ரிஷியின் ஆசிரமத்தை அடைந்தார். தியானத்திலிருந்த சமிக ரிஷியிடம் குடிப்பதற்கு நீர் வேண்டினார்.

Latest