1579ஆம் ஆண்டின் கௌர பூர்ணிமா அன்று நரோத்தம தாஸ தாகூர் அவர்கள் ஸ்ரீல ஜீவ கோஸ்வாமிக்கு ஒரு கடிதம் எழுதியுள்ளார். அதில் அவர் அந்த ஒரு வருடத்தின் புத்தக விநியோகம் குறித்த தகவலை...
ஒருநாள் ஸ்ரீல பிரபுபாதர் பூங்கா ஒன்றில் இருந்தபோது, ஆகாயத்தைப் பார்த்த வண்ணம் வினவினார், “கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளாரா?”
“மழை மேகத்தைப் போல கிருஷ்ணர் கருநீல வண்ணமுடையவர் என்று கிருஷ்ணர் புத்தகத்தில் கூறப்பட்டுள்ளது,” என்று சீடர் ஒருவர் பதிலளித்தார்.
“கிருஷ்ணர் ஆகாயத்தின் நிறத்தைக் கொண்டுள்ளார். அவருடைய திருமேனியின் தேஜஸிலிருந்து வரும் ஒளியே ஆகாயத்திற்கு நீல நிறத்தை அளிக்கிறது,” என்று ஸ்ரீல பிரபுபாதர் விளக்கமளித்தார்.
சுதந்திர இந்தியாவின் வரலாற்றில் நீண்ட நெடுங்காலமாக இழுத்தடிக்கப்பட்ட பல்வேறு வழக்குகளில் ஒன்று, அயோத்தி இராமஜென்ம பூமி வழக்கு. நவம்பர் மாதத்தில் அதற்கான இறுதி தீர்ப்பு வரும் என்று அனைவரும் எதிர்பார்க்கும் இத்தருணத்தில், இராமஜென்ம...
விருந்தாவனத்தில் ஒருநாள் யமுனை நதிக்கரை வழியாக நாங்கள் காலை நடைப்பயிற்சி மேற்கொண்டிருந்த வேளையில், நதியிலிருந்து சிறிது நீரை எடுத்து வருமாறு ஸ்ரீல பிரபுபாதர் கூறினார். சியாமசுந்தர பிரபு தனது கை நிறைய நீர் எடுத்து வந்தார். ஸ்ரீல பிரபுபாதர் தமது தலையில் சில நீர்த்துளிகளைத் தெளித்துக் கொண்டு, எங்கள் அனைவரையும் அவ்வாறு செய்யுமாறு கூறினார்.
“இது யமுனையில் நீராடியதற்கு சமமானது,” என்று அவர் கூறினார்.
ஐரோப்பியர்கள் அகண்ட பாரதத்தின் மீது ஆதிக்கம் செலுத்தியபோது, பண்டைய பெருமைமிகு பண்பாட்டினை அழிப்பதற்கு பல்வேறு யுக்திகளைக் கையாண்டனர். பிரித்தாளும் சூழ்ச்சியின் மூலமாக, மொழி, இனம், மதம் என மக்களை பல வழிகளில் பாகுபடுத்தினர். அத்தகு யுக்திகளில் முக்கியமான ஒன்று “ஆரிய ஆக்கிரமிப்புக் கொள்கை” (AIT – Aryan Invasion Theory).