வில்லெடுத்து வாளெடுத்து வானைப் பிளக்கும் கோஷமெடுத்து மன்னர்களை மண்டியிடச் செய்து மண்ணையும் பொன்னையும் வென்ற மன்னர்கள் பலர்; வில்லின்றி வாளின்றி மண்ணின்றி பொன்னின்றி உலகையே வென்ற உத்தமர் ஒருவரே; அவரே தெய்வத்திரு அ.ச. பக்திவேதாந்த சுவாமி பிரபுபாதர்.
“இறைவன் ஒருவனே, இந்து மதத்தில் ஏன் இத்தனை தெய்வங்கள்? இறைவனுக்கு உருவம் கிடையாது, இந்து மதத்தில் ஏன் உருவ வழிபாடு? இறைவனுக்கு பிறப்பு கிடையாது, இந்து மதத்தில் ஏன் அவதாரங்கள்? இறைவனுக்கு எந்தத் தேவையும் கிடையாது, நீங்கள் ஏன் அவருக்கு உணவு படைக்கிறீர்?” பதில்களை அறிவீர்!
வழங்கியவர்: கிருஷ்ண காமினி தேவி தாஸி
ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக, சிந்தனைச் செல்வர், தத்துவ மேதை, சமூகப் புரட்சியாளர், மனிதப் பண்புகளின் களஞ்சியம் எனப்படும் ஸ்ரீ...
பகவானை மறந்து பௌதிக உலகினுள் வாழும் ஜீவன் தனது ஒவ்வொரு பிறவியிலும் வாழ்க்கையை வீணடிக்கின்றான். அவ்வாறு வாழ்ந்தவன் ஏதோ நல்லதிர்ஷ்டத்தினால் பகவானிடம் சரணடைவதற்கான வாய்ப்பினைப் பெற்றால், அவன் அதனை முறையாகப் பயன்படுத்திக்கொள்ள வேண்டும். இதனை எடுத்துரைக்கும் விதமாக, ஒரு சாதாரண கட்டுண்ட ஆத்மாவின் நிலையில் தம்மை நிறுத்திய பக்திவினோத தாகூர் இப்பாடலை நமக்கு வழங்கியுள்ளார். மனித வாழ்வை வீணடிக்கக் கூடாது என்பதை இப்பாடல் நன்கு உணரச் செய்கிறது.
பக்திவினோத தாகூர் தம் வாழ்நாள் முழுவதையும் முழுமுதற் கடவுளான கிருஷ்ணருக்கு இடையறாது தொண்டு செய்தார். இவ்வுலகிற்கு நன்மை பயக்க இவர் ஆற்றிய தொண்டு, ஸ்ரீ சைதன்யர் மற்றும் கோஸ்வாமிகளின் அளவற்ற செயலுக்கு ஒப்பானதாகும்.
சைதன்ய மஹாபிரபுவின் ஆழ்ந்த, உயர்ந்த தத்துவங்களை அடிப்படையாகக் கொண்ட கௌடீய வைஷ்ணவ ஸம்பிரதாயம் சுமார் 150 ஆண்டுகளுக்கு முன்பு எந்த அளவு சீர்குலைந்து காணப்பட்டது என்பதை நம்மால் எண்ணிப் பார்க்க இயலாது. சைதன்ய மஹாபிரபுவின் தத்துவங்கள் மிகவும் ஆழமானவை, கற்றறிந்த பண்டிதர்களாலும் அதன் ஆழத்தை உணர முடியாது. இருப்பினும், பண்பாடற்ற மனிதர்களின் அறியாமையினால், அவரது உயர்ந்த வைஷ்ணவ ஸம்பிரதாயம் சீர்குலைந்து காணப்பட்டது.