வழங்கியவர்: தவத்திரு பக்தி விகாஸ ஸ்வாமி
கொரோனா வைரஸ் தொடர்ந்து உலகில் பேரழிவை ஏற்படுத்தி வருகிறது. இதுவரை இலட்சக்கணக்கானோர் இறந்துள்ளனர், எந்த விதத்திலும் இதற்கு முடிவு ஏற்படவில்லை. மனித இனத்திற்கு பேரழிவை வழங்கும் இந்த...
கிழக்கு ராஜஸ்தானின் கரடு முரடான குன்று பிரதேசத்தில் உள்ள கரௌலி என்னும் சிறிய நகரம்தான் பகவான் சைதன்ய மஹாபிரபுவின் முதன்மையான சீடர்களில் ஒருவரான ஸநாதன கோஸ்வாமியால் வழிபடப்பட்ட பகவான் கிருஷ்ணரின் விக்ரஹமான ஸ்ரீ மதன-மோஹனரின் வசிப்பிடமாகும்.
கிருஷ்ணர் விருந்தாவனத்தில் லீலைகள் புரிந்த பெரும்பாலான இடங்கள் காலப்போக்கில் மறைந்து போயிருந்த காரணத்தினால், அவற்றைக் கண்டுபிடிக்கும் பொருட்டு பகவான் சைதன்யர் ஸநாதனரை விருந்தாவனத்திற்கு அனுப்பி வைத்தார். ஸநாதனர் பகவான் மதன-மோஹனரின் விக்ரஹத்தைக் கண்டுபிடித்து விருந்தாவனத்தில் வழிபட்டு வந்தார்.
வங்காள பூமியானது கௌட மண்டல பூமி எனப்படுகிறது. இது மேற்கு வங்காளம் (இந்தியாவின் ஒரு மாநிலம்), கிழக்கு வங்காளம் (வங்காளதேச நாடு) என இரண்டாகப் பிரிக்கப்பட்டுள்ளது. இன்றைய ஒடிசாவின் சில பகுதிகளும் கௌட மண்டல பூமியில் அடங்கும். இப்பகுதிகள் பசுமை வளத்திற்கும் நீர் வளத்திற்கும் பெயர்பெற்றவை.
சைதன்ய மஹாபிரபுவும் அவரது நித்திய சகாக்களும் தோன்றி திவ்யமான லீலைகளைப் புரிந்த பூமியையே “கௌட மண்டல பூமி” என கௌடீய வைஷ்ணவ ஆச்சாரியர்கள் கூறுகின்றனர்.
எது தீர்த்த ஸ்தலம்? வைகுண்டத்தில் நித்தியமாக வசிக்கும் பகவான் நாராயணரோ அவரது தூய பக்தர்களோ இம்மண்ணுலகில் தோன்றி லீலைகள் புரிந்த இடங்கள் புனிதமான தீர்த்த ஸ்தலங்களாக அறியப்படுகின்றன. இந்த தீர்த்த ஸ்தலங்கள் வைகுண்ட லோகங்களிலிருந்து வேறுபாடற்றவையாக உள்ளதால் அளவிட இயலாத தெய்வீக சக்திகளால் நிறைந்துள்ளன. பகவான் கிருஷ்ணர் எங்கும் நீக்கமற நிறைந்திருந்தாலும், தீர்த்த ஸ்தலங்களில் அவரை அணுகுதல் மிகவும் எளிது. தீர்த்த ஸ்தலங்களில் ஒருவர் செய்யும் பக்தி சேவை பல மடங்கு பலனைத் தரும் என்பது சாஸ்திரங்களின் கூற்று. எனவே, ஆன்மீக வாழ்வில் துரிதமாக முன்னேற விரும்புவோரின் அடைக்கலமாக தீர்த்த ஸ்தலங்கள் திகழ்கின்றன.