- Advertisement -spot_img

CATEGORY

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம்

வட இந்தியப் பயணங்கள்

தென்னிந்தியாவிலிருந்து புரிக்குத் திரும்பிய ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு விருந்தாவனத்திற்குச் செல்லும் ஆவலை மீண்டும்மீண்டும் வெளிப்படுத்தினார், ஆனால் அவரது சகாக்கள் ஏதேனும் காரணத்தைக் கூறி அவரைத் தாமதப்படுத்தினர். எனினும், காலப்போக்கில் அவர்களது அனுமதியுடன் கௌராங்கர் வங்காளத்தின் வழியாக விருந்தாவனத்திற்குப் புறப்பட்டார்.

புரியில் ஸ்ரீ சைதன்யரின் ரத யாத்திரை லீலைகள்

இரண்டு வருடம் கழித்து, ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு எப்போது புரிக்குத் திரும்பினாரோ, அப்போதுதான் அவரது பக்தர்களுக்கு உயிரே வந்ததுபோல இருந்தது. நித்யானந்தர், ஜகதானந்தர், முகுந்தர், ஸார்வபௌம பட்டாசாரியர் முதலியோரை ஸ்ரீ சைதன்யர் முதலில் சந்தித்தார், இராமானந்த ராயரின் பெருமைகளை ஸார்வபௌமரிடம் தெரிவித்தார். மன்னரின் குருவான காசி மிஸ்ரரின் வீட்டில் பகவான் சைதன்யருக்காக ஓர் அறையை ஸார்வபௌமர் அமைத்துக் கொடுத்தார். அந்த அறை, வசதியான முறையில் ஜகந்நாதர் கோயிலுக்கு அருகிலும், அதே சமயத்தில் தனிமையாகவும் அமைதியுடனும் திகழ்ந்தது.

மஹாபிரபுவின் தென்னிந்திய யாத்திரை

மஹாபிரபுவின் மூத்த சகோதரரான விஸ்வரூபர் சந்நியாசம் ஏற்ற பின்னர், அவரைப் பற்றி எந்தவொரு தகவலும் கிடைக்கவில்லை. எனவே, அவரைத் தேடுவதாக காரணம் கூறி, கௌராங்கர் தென்னிந்தியா செல்ல விரும்பினார். எனினும், அவரின் தென்னிந்தியப் பயணத்திற்கான உண்மையான காரணம், அங்குள்ள ஒவ்வொருவரையும் முழுமுதற் கடவுள் கிருஷ்ணரின் களங்கமற்ற பக்திப் பாதைக்கு மாற்றுவதே. மஹாபிரபுவின் பயணத்தை அறிந்த அவரது பக்தர்கள் அனைவரும் நித்யானந்த பிரபுவின் தலைமையில் அவருடன் செல்வதற்கு விருப்பம் தெரிவித்தனர்; ஆயினும், மஹாபிரபு தனியாகச் செல்வதையே வலியுறுத்தினார்.

நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

ஸ்ரீ சைதன்ய சரிதாம்ருதம்

ஜகந்நாத புரியில் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு தமது லீலைகளை வெளிப்படுத்திய காலத்தில் அவரது உற்ற தோழராகவும் அந்தரங்க காரியதரிசியாகவும் செயல்பட்டவர் ஸ்ரீல ஸ்வரூப தாமோதர கோஸ்வாமி ஆவார். ஸ்வரூப தாமோதரர் ஸ்ரீ சைதன்யரின் உள்ளக்கிடக்கையை முற்றிலும் உணர்ந்தவர். மஹாபிரபு எத்தகைய மனோபாவத்தில் உள்ளாரோ அதற்குத் தகுந்தாற்போல அவருக்கு உதவி புரிந்தார். ஸ்வரூபருக்கு உதவியாளராகச் செயல்பட்ட ஸ்ரீல ரகுநாத தாஸ கோஸ்வாமி மஹாபிரபுவின் அந்த லீலைகள் அனைத்தையும் நேரில் காண்பதற்கும் முதலில் கேட்பதற்கும் வாய்ப்பினைப் பெற்றார். ஸ்வரூபரும் மஹாபிரபுவின் அந்த லீலைகளைக் குறிப்பெடுத்து வைத்தார்.

Latest

- Advertisement -spot_img