201, 2018

பிருது மன்னரின் யாகம்

By | January, 2018|Categories: ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|Tags: , , |0 Comments

பூமியின் இந்த மங்கலமான இன்மொழிகளைக் கேட்டு பிருது மன்னர் சாந்தமடைந்து அவற்றை ஏற்றுக் கொண்டார். பின், பூமியிலுள்ள ஒவ்வொரு பிரிவினரும் தத்தமது பிரதிநிதிகளை கன்றுகளின் வடிவில் அனுப்பி, தமக்குத் தேவையான உணவினை பாலாகக் கறந்து, தத்தமது பாத்திரங்களில் நிரப்பிக் கொண்டனர். அதன் விவரம் அட்டவணையில் கீழே வழங்கப்பட்டுள்ளது.

101, 2018

ஜட பரதர்

By | January, 2018|Categories: படக்கதைகள்|Tags: , , |0 Comments

மன்னராக இருந்த பரதர் அனைத்தையும் துறந்து காட்டிற்குச் சென்று பகவத் பக்தியில் ஈடுபட்டார். இருப்பினும், ஒரு மானின் மீதான பற்றுதலினால் தமது நிலையிலிருந்து வீழ்ச்சியுற்று ஒரு மானாகப் பிறந்தார்.

912, 2017

ஸ்வர்கமும் வைகுண்டமும் ஒன்றா?

By | December, 2017|Categories: தத்துவம்|Tags: , , |0 Comments

இறை நம்பிக்கை உள்ளவர்கள் பலரும் ஸ்வர்கம் செல்ல பேரார்வம் காட்டுகின்றனர். இந்துக்கள் மட்டுமல்லாது இதர மதத்தினரும் ஸ்வர்கத்திற்குச் செல்வதை விரும்புகின்றனர். இறை நம்பிக்கை இல்லாதவர்களும்கூட சில சமயங்களில் தங்களுக்கு நெருக்கமானவர்கள் மரணிக்கும்போது, அவர்கள் ஸ்வர்கத்தை அடைந்து விட்டனர் என குறிப்பிடுகின்றனர். பெருமாள் கோயிலில் உள்ள வைகுண்ட வாசல் அல்லது பரமபத வாசலை ஸ்வர்க வாசல்” என்று அழைத்து, ஸ்வர்கத்திற்கு செல்லும் தங்களது ஆர்வத்தை மக்கள் வெளிப்படுத்துகின்றனர். ஸ்வர்கத்தை அடைவதே தங்களது வாழ்வின் இலட்சியமாகக் கருதும் இவர்கள் பௌதிக, ஆன்மீக உலகின் தன்மைகளை சற்றேனும் அறிந்துகொள்வது அவசியம்.

812, 2017

ருக்மிணியைக் கடத்திய கிருஷ்ணர்

By | December, 2017|Categories: படக்கதைகள்|Tags: , , , |0 Comments

விதர்ப நாட்டு மன்னர் பீஷ்மகரின் ஒரே மகளான ருக்மிணி பேரழகு வாய்ந்தவள். நாரதரிடமிருந்து பகவான் கிருஷ்ணரின் லீலைகளையும் ஐஸ்வர்யங்களையும் கேட்டறிந்த ருக்மிணி தன்னை அவரது பாத கமலங்களில் அர்ப்பணித்தாள், அவரது மனைவியாகி அவருக்கு சேவை செய்ய விருப்பம் கொண்டாள்.

712, 2017

டெங்கு காய்ச்சலும் பௌதிக காய்ச்சலும்

By | December, 2017|Categories: சமுதாய பார்வை|Tags: , , |0 Comments

மருத்துவம், கல்வி, இராணுவம், பொருளாதாரம் என பல்வேறு துறைகளின் வளர்ச்சியினை நவீன நாகரிகம் பெருமையுடன் காணும் சூழலில், ஒரு சாதாரண காய்ச்சல் அனைவரையும் பீதியில் உறைய வைத்துள்ளது என்பதைப் பார்க்கும்பொழுது, ஒரு மருத்துவரான எனக்கு தர்ம சங்கடமாகவும் சற்று வேடிக்கையாகவும் இருக்கிறது. சற்றுப் பொறுங்கள், நீங்கள் இதை எவ்வாறு சாதாரண காய்ச்சல் என்று கூறலாம்? இது கொசுவினால் உருவாகி உயிரையே பறிக்கும் டெங்கு காய்ச்சல் அல்லவா!” என்று பலர் கூறலாம்.

612, 2017

ஆத்மாவும் அதன் பல்வேறு உடல்களும்

By | December, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதரின் உபன்யாசங்கள்|Tags: , , |0 Comments

பௌதிக உலகில் உயிர்வாழி எவ்வாறு அறியாமையினால் மறைக்கப்பட்டுள்ளான் என்பதுகுறித்த விவரம் இங்கே வழங்கப்பட்டுள்ளது. கனவில், நான் இன்னார், இப்படிப்பட்டவன், எனக்கு வங்கியில் இவ்வளவு பணம் உள்ளது,” என்பன போன்ற அனைத்து விஷயங்களையும் நாம் மறந்துவிடுவது வழக்கமே. கனவிலும் சரி, நினைவிலும் சரி, நாம் எப்போதும் செயல்களில் ஈடுபட்டுள்ளோம். கனவிலும் நாமே செயல்படுகிறோம், விழித்திருக்கும் நிலையிலும் நாமே செயல்படுகிறோம். கனவு, நினைவு என்று சூழ்நிலைகள் மாறும்போதிலும், இவற்றை உணரக்கூடிய ஆத்மா எனும் நாம் மட்டும் அப்படியே மாறாது இருக்கிறோம், ஆனால் காண்பவற்றை மறந்துவிடுகிறோம்.

512, 2017

பிரபுபாதரின் புத்தகங்களை அனைவருக்கும் கொடுங்கள்

By | December, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதர்|Tags: , |0 Comments

நோயாளி ஒருவன் மருத்துவரிடம் சென்று தனது உடலின் நோயை குணப்படுத்திக்கொள்ள தயாராக உள்ளான், அதில் கவனக் குறைவாக இருப்பது தனது உடலைப் பாதிக்கும் என்பதை அவன் நன்கு அறிந்துள்ளான். ஆனால் அதே வேளையில் உடலுக்குள் கட்டுண்டு கிடப்பதே தன்னுடைய (ஆத்மாவின்) உண்மையான நோய் என்பதையும் அதை குணப்படுத்துவதற்கான மருத்துவத்தை அறியாதவனாகவும் அவன் உள்ளான். ஆத்மாவைப் பற்றிய உயர்ந்த அறிவு, சிந்தனைகள், மன நிம்மதி உள்ளிட்ட பூரண ஞானத்தையும் பக்தியையும் அளிக்கும் ஸ்ரீல பிரபுபாதரின் புத்தகங்கள் விலை மதிப்பற்றவை.

412, 2017

நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

By | December, 2017|Categories: ஸ்ரீ சைதன்ய சரிதாம்ரிதம், ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|Tags: , , |Comments Off on நவத்வீபத்தில் நிகழ்ந்த நாம ஸங்கீர்த்தன லீலைகள்

மஹாபிரபு (நிமாய்) காலமுற்ற தமது தந்தைக்கு ஸ்ரார்த்தம் செய்வதற்காக, தமது மாணவர்கள் சிலருடன் கயாவிற்குச் சென்றார். நவத்வீபத்தில் ஏற்கனவே சந்தித்திருந்த ஈஸ்வர புரியை அச்சமயத்தில் நிமாய் அங்கே சந்திக்க நேர்ந்தது. அப்போது நிமாய் பண்டிதருக்கு தீக்ஷையளித்த ஈஸ்வர புரி, எப்பொழுதும் கிருஷ்ணரின் திருநாமத்தை உச்சரிக்கும்படி அறிவுரை வழங்கினார். அனைத்து ஞானத்தின் குறிக்கோளாகவும் ஆதியாகவும் திகழும் முழுமுதற் கடவுளான பகவான் சைதன்யர், வெளிப்புறப் பார்வையிலும் சிறந்த பண்டிதராக இருந்தவர். இருப்பினும், ஆன்மீக குருவை ஏற்றுக்கொள்வதன் பூரணத் தேவையை மெய்ப்பிப்பதற்காக, அவரும் ஒரு குருவை ஏற்றுக் கொண்டார்.

312, 2017

கண்மூடித்தனமான சரணாகதி நீடிக்காது

By | December, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|Tags: , , |0 Comments

கடவுளைப் பற்றிய விஞ்ஞான அறிவிற்கு உணர்ச்சிகள் தேவையில்லை. உணர்ச்சிகள் தேவையே இல்லை. அவை உபயோகமற்றவை. கடவுளைப் பற்றிய அறிவு உண்மையானதாக இருக்க வேண்டும், உணர்ச்சிகளால் எந்தப் பயனும் இல்லை. பக்தியின் மிகவுயர்ந்த நிலையில் உணர்ச்சிகள் தேவைப்படுகின்றன. ஆனால் கடவுளைப் பற்றிய ஆரம்ப விஞ்ஞான அறிவைப் பெறுவதற்கு உணர்ச்சிகள் தேவையில்லை.

212, 2017

துர்வாசரின் திருப்தி

By | December, 2017|Categories: தெரிந்த கதை தெரியாத துணுக்கு|Tags: , , |0 Comments

மஹாபாரதத்தில் பாண்டவர்கள் வன வாசத்தில் இருந்தபோது, துரியோதனன் அவர்களுக்கு பலவிதமான தொல்லைகளைக் கொடுத்தான் என்பது தெரிந்த கதை. அந்த தொல்லைகளில் ஒன்றாக, துர்வாச முனிவரை அவன் அனுப்பி வைத்ததும் அவர் கிருஷ்ணருடைய கருணையினால் எவ்வாறு திருப்தியுற்றார் என்பதும் தெரியாத துணுக்கு.

112, 2017

பிருது மன்னரின் ஆட்சி

By | December, 2017|Categories: ஸ்ரீமத் பாகவத சுருக்கம், ஸ்ரீமத் பாகவதம்|Tags: , |0 Comments

தம்மைப் புகழ்வதை தடுத்து நிறுத்திய பிருது மன்னர் முழுமுதற் கடவுளின் ஓர் அவதாரம் என்பதை மாமுனிவர்களிடமிருந்தும் மகான்களிடமிருந்தும் கேட்டறிந்த இசைக் கலைஞர்கள் ஆனந்தத்தில் திளைத்தனர். பிருது மன்னர் தங்களிடம் புன்னகையோடு உரையாடியதை எண்ணி மகிழ்ந்தனர். சூதர்கள், மாகதர்கள் போன்ற இசைக் கலைஞர்கள் முனிவர்களின் அறிவுரைப்படி அவரைத் தொடர்ந்து புகழ்ந்தனர்.

811, 2017

கோயில் கட்டுவதற்கு பதில் மருத்துவமனை கட்டலாமா?

By | November, 2017|Categories: ஞான வாள்|Tags: , , , |0 Comments

ஒரு சிலர், சம்பந்தம் இருக்கு, இரண்டிற்கும் பணம் செலவிட வேண்டியுள்ளதே. கோயில் கட்டும் பணத்தில் மருத்துவமனை கட்டலாமே,” என்று கூறலாம். இந்த வாதத்தை ஏற்றால், கோயிலுக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள், மருத்துவமனைக்கு யார் பணம் செலவழிக்கிறார்கள் என்பதை கவனிக்க வேண்டும். நிச்சயம் இரண்டும் வேறுபட்ட நபர்கள். இன்றைய கோயில்கள் தனிமனிதர்களின் நன்கொடையினாலேயே கட்டப்பட்டு வருகின்றன. ஒருவர் தமது பணத்தை தாம் விரும்பும் வழியில் அறநெறியில் செலவழிப்பதற்கு அவருக்கு பூரண உரிமை உள்ளது, யாரும் யாரையும் பலவந்தப்படுத்த முடியாது.

711, 2017

தூய பக்தி

By | November, 2017|Categories: தத்துவம்|Tags: , |0 Comments

தூய ஆத்மாவானது பௌதிக வாழ்வின் இன்ப துன்பம், விருப்பு வெறுப்பு முதலியவற்றிற்கு அப்பாற்பட்டது. எதையும் எதிர்பார்க்காமல் செய்யப்படும் தூய பக்தி நிலையில் மட்டுமே அத்தளத்தை அடைய முடியும். சேவை செய்யும் நிலையை தாமாக முன்வந்து ஏற்க வேண்டும். தூய பக்தி என்பது வெறும் மனதளவில் உள்ள உணர்ச்சி அல்ல; மாறாக, நமது அன்பிற்கு பாத்திரமான பகவான் கிருஷ்ணருக்கு நம்மை முழுமையாக அர்ப்பணித்து சேவை செய்வதாகும். தூய பக்தி பின்வருமாறு வரையறுக்கப்பட்டுள்ளது.

611, 2017

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள்

By | November, 2017|Categories: ஸ்ரீல பிரபுபாதருடன் ஓர் உரையாடல், ஸ்ரீல பிரபுபாதர்|Tags: , , , |0 Comments

நாங்கள் ஹரே கிருஷ்ண பக்தர்கள் 1975ஆம் ஆண்டின் மார்ச் 5ஆம் நாள், நியூயார்க்கின் ஜான் கென்னடி சர்வதேச விமான நிலையத்தில் ஸ்ரீல பிரபுபாதருக்கும் நிருபர்களுக்கும் இடையே நிகழ்ந்த உரையாடல்.   நிருபர் 1: சுவாமிஜி, உங்களது இயக்கத்தைப் பற்றி ஏதுமறியாதவர்களுக்கும் உங்களது இயக்கத்தைப் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கும் [...]

511, 2017

நவத்வீபத்தில் ஸ்ரீ சைதன்யர்

By | November, 2017|Categories: ஸ்ரீ சைதன்ய மகாபிரபு|Tags: , |0 Comments

இந்தியாவில் இஸ்லாமிய ஆக்கிரமிப்பாளர்கள் கொடிகட்டி பறந்த தருணம்; இஸ்லாமிய பிரச்சார அழுத்தம், தவறாக ஊக்குவிக்கப்பட்ட இந்து உயர் ஜாதியினரின் கொடுமை முதலிய சமூக சூழ்நிலைக்கு மத்தியில், பகவான் ஸ்ரீ சைதன்ய மஹாபிரபு மக்களிடையே பக்தி உணர்வை போதிப்பதற்காக அவதரித்தார்.

கட்டுரைகளை இ-மெயிலில் பெற

* indicates required

முக்கிய கட்டுரைகள்